இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பிபிசியின் சர்ச்சைக்குரிய தொடர் குறித்து தகவல் தெரிவிப்பதில் அமெரிக்கா விலகியிருக்கிறது. இந்த ஆவணப்படம் தனக்குத் தெரியாது, ஆனால் வொஷிங்டனையும் புது டெல்லியையும் இரண்டு செழிப்பான, துடிப்பான ஜனநாயக நாடுகளாக இணைக்கும் பகிரப்பட்ட மதிப்புகளை நன்கு வெளிப்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்தியாவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு கவலைகள் இருக்கும்போது, நாங்கள் குரல் கொடுத்துள்ளோம். அதைச் செய்வதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் எங்கள் உறவின் இதயத்தில் இருக்கும் அந்த மதிப்புகளை முதலில் வலுப்படுத்த விரும்புகிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்க உறவு பன்முகத்தன்மை கொண்டது. விதிவிலக்காக ஆழமான மக்கள்-மக்கள் உறவுகள் தவிர நெருக்கமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளும் உள்ளன என்றார். அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு எதிராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க இந்த ஆவணப்படம் வழிவகுக்குமா என்ற கேள்விக்கு, 'அந்த விதிமுறைகள் மூலம் நாங்கள் அதைப் பற்றி சிந்திக்கவில்லை. நான் உள்நாட்டு அரசியலைப் பற்றி சிந்திக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.
தெற்காசியாவில் பிராந்திய ஸ்திரத்தன்மையை நீண்டகாலமாக வொஷிங்டன் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எந்தவொரு உரையாடலின் வேகம், நோக்கம் மற்றும் தன்மை ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான விவகாரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கான பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் 'விருப்பத்தை' இந்தியா நிராகரித்ததாகக் கூறப்படும் கேள்விக்கு, தெற்காசியாவில் பிராந்திய ஸ்திரத்தன்மையைக் காண வொஷிங்டன் நிச்சயமாக விரும்புவதாக பிரைஸ் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM