(எம்.மனோசித்ரா)
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இரு தினங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்காமலிருப்பதற்கு இலங்கை மின்சாரசபை இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்றும் நாளையும் மின் துண்டிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களின் நலன் கருதி இரு தினங்களுக்கு முழுமையான நீர் மின் உற்பத்திக்கு தேவையான நீரை நீர்த்தேக்கங்களிலிருந்து விடுவிக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் கோரிக்கை விடுத்தது.
ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இணக்கம் தெரிவித்த நிலையிலேயே , இரு நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அடுத்து வரும் நாட்கள் தொடர்பான தீர்மானம் 01 ஆம் திகதி எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM