கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக் கிண்ணத்திற்கும் குறி வைத்துள்ள ஷஃபாலி

Published By: Vishnu

30 Jan, 2023 | 10:27 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டத்தை சூடிய அணித் தலைவி ஷஃபாலி வர்மா, பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ணத்திலும் இந்தியாவுக்கு மேலும் வெற்றிகளை ஈட்டிக்கொடுப்பதற்கு தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக ஞாயிறன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றியீட்டி அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரிப்பதற்கு இந்தியாவுக்கு பெரிதும் உதவிய 19 வயதான ஷஃபாலி வர்மா, இரட்டை வெற்றிக்கு இப்போது குறிவைத்துள்ளார்.

இந்தியாவின் சிரேஷ்ட மகளிர் அணியில் கடந்த சில வருடங்களாக விளையாடிவரும் ஷஃபாலி வர்மா சிறந்த அனுபவசாலியாவார்.

இங்கிலாந்தில் 2017இல் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் அவுஸ்திரேலியாவில் 2020இல் நடைபெற்ற மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா உப சம்பயினாகியிருந்தது.

2020 மகளிர் இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணியில் 16 வயது வீராங்கனையாக இடம்பெற்ற ஷஃபாலி வர்மா 5 இன்னிங்ஸ்களில் 163 ஓட்டங்களை மொத்தமாக பெற்றிருந்தார். அதன் மூலம் இந்தியா சார்பாக அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தை வகித்தார்.

இந்திய மகளிர் சிரேஷ்ட அணியினால் சாதிக்க முடியாததை கனிஷ்ட அணிக்கு தலைமைதாங்கி சாதித்துக் காட்டிய ஷஃபாலி 10 நாடுகள் பங்குபற்றும் ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவை சம்பியனாக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்.

தென் ஆபிரிக்காவிலிருந்து 19 வயதுக்குட்பட்ட உலக கிண்ணத்துடன் மாத்திரம் நாடு திரும்ப வேண்டும் என எண்ணினீர்களா என அவரிடம் கேட்கப்பட்டபோது, 'இல்லை, சிரேஷ்ட உலக சம்பியன் பட்டத்தையும் வென்றெடுக்க விரும்புகிறேன்' என்றார்.

'நான் எப்போதும் என் முன்னே உள்ள இலக்கை அடைவதை குறியாக கொண்டவள். நான் 19 வயதுக்குட்பட்ட அணியில் இணைந்த போது எனது குறிக்கோள் எல்லாம் 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியன் பட்டத்தை சுவீகரிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. இன்று நாங்கள் அதனை வென்றுவிட்டோம். அந்த வெற்றியின் நம்பிக்கையுடன் சிரேஷ்ட உலகக் கிண்ணத்தையும் வென்றெடுக்க முயற்சிப்பேன்' என ஷஃபாலி வர்மா குறிப்பிட்டார்.

19 வயதுக்குட்பட்ட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஷஃபாலி மொத்தமாக 172 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பட்டியலில் 3ஆம் இடத்திலிருந்தார். அவரது சக வீராங்கனை ஷ்வெட்டா செஹ்ராவத் 297 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

பந்துவீச்சில் பர்ஷவி சொப்ரா 12 விக்கெட்களையும் மன்னாத் காஷியப் 9 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

'எமது வெற்றிக்கு ஒவ்வொரு வீராங்கனையும் கொண்டிருந்த தன்னம்பிக்கைதான் காரணம்' எனக் குறப்பிட்ட அவர் இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை வாங்க கத்தார்...

2023-03-23 12:08:50
news-image

முவர்ஸ் கழக வெற்றியில் அசத்திய யாழ்....

2023-03-23 09:32:37
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

2023-03-22 14:55:24
news-image

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி :...

2023-03-22 11:40:58
news-image

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறும்...

2023-03-22 09:40:29
news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47
news-image

WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

2023-03-21 12:53:50
news-image

WPL: குஜராத்தை வென்று ப்ளே ஓவ்...

2023-03-21 11:50:19
news-image

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

2023-03-21 09:47:45
news-image

19இன் கீழ் மும்முனை ஒருநாள் கிரிக்கெட்...

2023-03-21 09:18:28