யூதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட பாலஸ்தீனியரின் வீட்டை இடிக்க நடவடிக்கை

Published By: Rajeeban

30 Jan, 2023 | 05:20 PM
image

யூதவழிபாட்டுதலத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பாலஸ்தீனிய நபரின் வீட்டை இடித்து தரைமட்டமாக்குவதற்காக  இஸ்ரேலிய படையினர் அந்த வீட்டை சுற்றிவளைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

படுகொலையில் ஈடுபட்டவரின் குடும்பத்தினரின் பிரஜாவுரிமையை பறிப்பது அவர்களை நாடு கடத்துவது உட்பட கடும் நடவடிக்கைகளிற்கு அனுமதியளிப்பதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை தயாராகியுள்ளது.

யூதவழிபாட்டுத்தலத்தில் படுகொலையில் ஈடுபட்டவரின் கிழக்கு ஜெரூசலேம் வீட்டை இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைத்துள்ளனர் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீட்டின் முன்பகுதிகளை உடைக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேலிய படையினர் ஈடுபட்டுள்ளதை காண்பிக்கும் படங்களை இஸ்ரேலிய படையினர் வெளியிட்டுள்ளனர்.

பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட நபரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளோம் அந்த வீடு தரைமட்டமாக்கப்படும் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பிரச்சினையை மேலும் தீவிரமானதானதாக மாற்ற விரும்பவில்லை ஆனால் நாங்கள் எதனையும் எதிர்கொள்ள தயார் என தெரிவித்துள்ள பிரதமர் பயங்கரவாதத்திற்கான எங்களின் பதில் கடுமையானது வலுவானது துல்லியமானது வேகமானது என தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் இன்னமும் உயிருடன் இருக்கின்றேன் -...

2023-04-01 14:34:48
news-image

நீதிமன்றத்தில் டிரம்பிற்கு கைவிலங்கிடமாட்டார்கள் - அதிகாரி...

2023-04-01 12:34:03
news-image

இத்தாலியில் ChatGPTக்கு தடை

2023-04-01 14:41:47
news-image

நேட்டோவில் புதிய அங்கத்தவராகிறது பின்லாந்து ;...

2023-03-31 17:11:38
news-image

டிரம்பை கைதுசெய்வார்களா? கைவிலங்கிடுவார்களா- சிறையில் அடைப்பார்களா?

2023-03-31 15:26:36
news-image

உருகி வரும் இமயமலை; மத்திய அரசு...

2023-03-31 14:47:53
news-image

சிட்னி பாலத்தின் மீது பாதுகாப்பற்ற விதத்தில்...

2023-03-31 13:30:36
news-image

ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜராகுவார் என...

2023-03-31 13:10:19
news-image

ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி சொத்தில்...

2023-03-31 11:20:21
news-image

பிலிப்பைன்ஸில் கப்பல் தீப்பற்றியதால் 31 பேர்...

2023-03-31 10:15:27
news-image

இந்தூர் ஆலய படிக்கட்டு கிணறு இடிந்ததால்...

2023-03-31 09:32:10
news-image

ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் நீதிபதிகள் உத்தியோகபூர்வமாக...

2023-03-31 09:19:48