இவ்வாண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிக எண்ணிக்கையான சுற்றுலாப்பயணிகள் வருகை

Published By: Digital Desk 3

30 Jan, 2023 | 05:00 PM
image

(நா.தனுஜா)

இவ்வாண்டு இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையான சுற்றுலாப்பயணிகள் வருகைதந்திருப்பதாக ஜெட்விங் ட்ரவெல்ஸின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஷிரோமல் ஹுரே தெரிவித்துள்ளார்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அதிலிருந்து மீள்வதற்கு சுற்றுலாத்துறை உள்ளடங்கலாக நாட்டிற்கு வருமானம் ஈட்டித்தரக்கூடிய துறைகளை மேலும் வலுப்படுத்தி ஊக்குவிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை வர்த்தகப்பேரவையினால் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தகக் கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்கேற்று, கருத்து வெளியிட்டிருக்கும் ஷிரோமல் ஹுரே, 'எமது பொருளாதாரத்திற்குப் பெருமளவில் பங்களிப்புச்செய்யும் நாடாக இந்தியா காணப்படுமென நான் நம்புவதுடன் தற்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் பல்வேறு நேர்மறையான நகர்வுகள் பெரிதும் வரவேற்கத்தக்கவையாகும்' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையான ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் வருகைதந்திருந்த போதிலும், கடந்த ஆண்டு முழுவதும் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளில் பெரும் எண்ணிக்கையானோர் இந்தியர்களேயாவர்.

கடந்த ஆண்டு இலங்கைக்கு வருகைதந்த 719,978 சுற்றுலாப்பயணிகளில் 123,004 பேர் இந்தியர்களாவர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய வளாகத்திற்கு மாற்றப்படும் வெளிவிவகார அமைச்சின்...

2024-04-23 16:27:31
news-image

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு தலைநகரில்...

2024-04-23 15:09:52
news-image

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

2024-04-23 16:22:01
news-image

யாழில் லொறியும் முச்சக்கர வண்டியும் கோர...

2024-04-23 15:15:39
news-image

உலக புத்தக தினம் இன்று

2024-04-23 15:22:07
news-image

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண்...

2024-04-23 14:13:24
news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

2024-04-23 14:11:33
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57