தன்னைக் கொல்ல பயங்கரவாதிகளுக்கு நிதியளித்தாரென முன்னாள் ஜனாதிபதி ஸர்தாரி மீது இம்ரான் கான் குற்றச்சாட்டு

Published By: Sethu

30 Jan, 2023 | 03:22 PM
image

தன்னை படுகொலை செய்வதற்காக, பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி நிதியளித்தார் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றம் சுமத்தியுள்ளார். 

இக்குற்றச்சாட்டை ஸர்தாரி நிராகரித்துள்ளதுடன், இம்ரான் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் இன்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் ஈ -இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், லாகூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் பேசுகையில், தன்னை கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட இரு முயற்சிகள் தோல்வியடைந்த பின், புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக, தன்னை கொல்வதற்காக பயங்கரவாதிகளுக்கு ஆசிப் அலி ஸர்தாரி நிதியளித்தார் எனக் கூறினார் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

"இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால், எனக்கு ஏதேனும் நடந்தால் அதன் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை இந்நாடு அறிந்துகொள்ள வேண்டும்'"எனவும் இம்ரான் கான் கூறினாரென செய்திகள் வெளியாகியுள்ளன.

"முன்னர் ஒரு பேரணியின்போது, என்னைக் கொல்வதற்கு நால்வர் திட்டமடுவதாக எனது ஆதரவாளர்களிடம் நான் கூறினேன். ஆனால், இத்தகவலை வெளிப்படுத்திய பின் அவர்கள் பின்வாங்கிவிட்டனர்.

2 ஆவது திட்டமாக, மதத்தின் பெயரால் வஸிராபாத்தி;ல் வைத்து என்னை கொல்ல முயன்றார்கள். ஆனால், இதையும் நான் தெரிந்துகொண்டேன். இரு பேரணிகளின்போது அவர்களின் திட்டத்தை நான் வெளிப்படுத்தினேன்" என இம்ரான் கான் கூறினார்.

கடந்த நவம்பர் 3 ஆம் திகதி வஸிராபாத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இம்ரான் கான் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதன்பின் 3 ஆவது திட்டமாக, தன்னைக் கொல்வதற்கு பயங்கரவாதிகளுக்கு ஸர்தாரி நிதியளித்தார் என இம்ரான் கான் கூறியுள்ளார்.

இந்நிலையில், மேற்படி குற்றச்சாட்டை ஆசிப் அலி ஸர்தாரி நிராகரத்துள்ளார். இக்குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே பொய்யாக சோடிக்கப்பட்டவை என அவர் கூறியுள்ளார். 

இதற்காக இம்ரான் கான் மன்னிப்பு கோர வேண்டும். அல்லது 10 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கத் தொடுக்கப்படும் என ஆசிப் அலி ஸர்தாரி, தனது சட்டத்தரணி ஊடாக இன்று அறிவித்தல் அனுப்பியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10