ஸ்லீப் பரலைஸ் எனும் உறக்க பக்கவாதப் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Ponmalar

30 Jan, 2023 | 11:30 AM
image

எம்மில் சிலர் இரவு நேரத்தில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று விழிப்பு நிலை ஏற்படும். அதன் போது உடல்களை அசைக்க இயலாத நிலையும், மார்பக பகுதியில் அழுத்துவது போன்ற உணர்வும் உண்டாகும். இவை மிகக் குறைந்த கால அவகாசமே நீடிக்கும்.  இதனைத் தான் மருத்துவர்கள் ஸ்லீப் பரலைஸ் எனும் உறக்க நிலை பக்கவாதம் என குறிப்பிடுகிறார்கள். வயது வித்தியாசமின்றி, பாலின பேதமின்றி 20 வீத மக்கள் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

சிலருக்கு இத்தகைய பாதிப்பு உறங்கிக் கொண்டிருக்கும் போது ஏற்படுவதால்.., பதட்டமடைந்து எழுந்து நிற்க முயற்சி செய்து கீழே விழுந்து விடுகிறார்கள். சிலர் இதன் போது நெஞ்சகப் பகுதியில் ஏற்படும் அழுத்த மாறுபாட்டினை ஹாலுசினேசன் எனப்படும் உருவ கற்பித்தத்தை கனவு நிலையில் கண்டு பதட்டமடைவர். இத்தகைய பாதிப்பு நார்கோலெப்ஸி எனப்படும் நரம்பியல் மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக உண்டாகிறது. 

மேலும் எம்முடைய மூளை பகுதியில் உறக்கநிலை, விழிப்பு நிலை போன்றவற்றை கட்டுப்படுத்தும் சுரப்பிகளில், ஒரக்சின் எனப்படும் ரசாயனத்தின் அளவில் சமசீரற்றத்தன்மை ஏற்படுவதன் காரணமாக இத்தகைய பாதிப்பு உண்டாகிறது. மேலும் இத்தகைய பாதிப்புள்ளவர்கள் பகல் பொழுதில் உறங்குவதும், அதிக நேரம் உறங்குவதையும் காணலாம். மேலும் சிலருக்கு பகல் பொழுதில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது உறக்க நிலை பாதிப்பு ஏற்பட்டு, இத்தகைய இடையூறு ஏற்படக்கூடும்.

இதற்கு நோயாளியின் சுவாசப் பாதை, நுரையீரல் இயங்கு திறன், அவர்களின் உறக்க நேரம், உறங்கும் நிலை, விழிக்கும் நிலை.. உள்ளிட்டவைகளை பிரத்யேகமாக பரிசோதிப்பது மற்றும் மூளை நரம்பியல் செயல்பாட்டு திறனறி பரிசோதனை ஆகியவற்றின் மூலம் துல்லியமாக அவதானித்து பாதிப்பின் தன்மையை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப முழுமையான நிவாரண சிகிச்சையை மருந்து, மாத்திரைகளின் மூலம் வழங்குவர்.

டொக்டர் சீனிவாஸ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10