எதிர்வரும் 31 ஆம் திகதியின் பின்னர், விடுமுறையின்றி சேவைக்கு சமூகமளிக்காத முப்படையினர் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முப்படையினருக்காக வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் டிசம்பர்  31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.