‘ஸ்ட்ரைக்கர்’படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 5

30 Jan, 2023 | 10:17 AM
image

புதுமுக நடிகர் ஜஸ்டின் விஜய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஸ்ட்ரைக்கர்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர்கள் பேரரசு மற்றும் சுசீந்திரன், விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் எஸ். ஏ. பிரபு இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'ஸ்ட்ரைக்கர்'. இதில் கதையின் நாயகனாக புதுமுக நடிகர் ஜஸ்டின் விஜய் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வித்யா பிரதீப் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடன இயக்குநர் ரொபட், கஸ்தூரி, அபிநயா ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மனிஷ் மூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் சித்தார்த் இசையமைத்திருக்கிறார். பாரா சைக்காலஜி ஹாரர் திரில்லர் ஜேனரில்  தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ எஸ் டபுள்யு கிரியேஷன்ஸ் மற்றும் ஜே எஸ் ஜே சினிமாஸ் சார்பில் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பங்கு பற்றி படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ. பிரபு பேசுகையில், '' இந்தப் படத்தின் தலைப்பை எமக்காக விட்டுக் கொடுத்த இயக்குநர் தாஸ் ரங்கசாமி அவர்களுக்கு நன்றி. எம்முடைய பால்ய கால நண்பரும், பாடலாசிரியருமான ஹரிசங்கர் ரவீந்திரன் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

படத்திற்கு வி டி பாரதி மற்றும் வி டி மோனிஷ் ஆகியோர் பின்னணி இசையமைத்திருக்கிறார்கள். பாரா சைக்காலஜி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை அளிக்கும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right