370 கிலோ காரை தனது உடலால் தூக்கிச் சென்று சாதனை படைத்த தமிழக இரும்பு இளைஞர்

Published By: Sethu

30 Jan, 2023 | 09:44 AM
image

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 370 கிலோகிராம் எடையுள்ள கார் ஒன்றை தனது உடலலால் தூக்கிச் சென்று சாதனை படைத்துள்ளார்.

குமரி மாவட்டம் தாமரைக்குட்டிவிளத்தைச் சேர்ந்தவர் கண்ணன் எனும்  39 வயதான இளைஞரே இச்சாதனையை படைத்துள்ளார்.

 தமிழ்நாட்டின் இரும்பு இளைஞராக அறியப்படுபவர் இவர். பஞ்சாப் மாநிலத்தில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் இவர்  மூன்றாவது இடம்பிடித்தார். இவர் ஏற்கனவே 13. 5 தொன் எடை கொண்ட லொறியை 111 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்று இந்திய தேசிய சாதனையையும்  படைத்துள்ளார்.

இந்நிலையில், நாகர் கோயிலில் நேற்று 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கிச் சென்று அவர் சாதனை படைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் மனோ தங்கராஜ் அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார். 

சோழன் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்கள், இச்சாதனையை அங்கீகரித்து  சாதனை சான்றிதழ, ; பதக்கம் வழங்கினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கியூபாவில் நடனமாடி இணையத்தைக் கலக்கும் 70...

2026-08-28 12:57:11
news-image

360 தொன் எடையுள்ள பிரம்மாண்டக் கோட்டையை...

2026-08-26 16:27:14
news-image

உசைன் போல்ட்டை மிஞ்சிய சீனாவின் மனித...

2026-08-24 11:24:33
news-image

தனது 117ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின்...

2026-08-24 12:20:32
news-image

2,000 ட்ரோன்கள்... ஒரு காதல் கதை!...

2026-08-22 15:48:35
news-image

ஐரோப்பாவில் மிக உயரமான மேரி மாதா...

2026-08-20 12:15:47
news-image

அழிவின் விளிம்பில் உள்ள கழுகுகளைப் பாதுகாக்கும்...

2026-08-14 09:55:23
news-image

விக்ரமுடன் இருந்த லார் கிப்பன் எங்கிருந்து...

2026-08-14 09:17:37
news-image

உக்ரேன் பெண்ணின் சாதனையை முறியடித்த இந்திய...

2026-08-11 11:58:56
news-image

2026 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த...

2026-08-11 10:05:57
news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01