(என்.வீ.ஏ.)
மெல்பர்ன், ரொட் லேவர் டென்னிஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்டெஃபானஸ் சிட்சிபாசை வெற்றிகொண்ட நோவாக் ஜோகோவிச், 10ஆவது அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் பட்டத்தை சுவீகரித்ததுடன் ரபாயல் நடாலின் 22 கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களையும் சமப்படுத்தினார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் கொவிட்-19 தடுப்பூசியைப் போடத் தவறியமைக்காக அவுஸ்திரேலிய அரசினால் வெளியேற்றப்பட்ட சேர்பிய வீரரான ஜோகோவிச், இந்த வெற்றியுடன் டென்னிஸ் வரலாற்று நாயகர்களில் ஒருவரானார்.
மூன்று மணித்தியாலங்களுக்கு சற்று குறைவான நேரத்தில் நிறைவடைந்த இறுதிப் போட்டியில் சிட்சிபாஸை 6 - 3, 7 - 6, 7 - 6 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில் 35 வயதான ஜோகோவிச் வெற்றிகொண்டார்.
இதன் மூலம் மெல்பர்ன் இறுதிப் போட்டியில் விளையாடிய 10 சந்தர்ப்பங்களிலும் அவர் சம்பியனாகியுள்ளதுடன் அங்கு 28 தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றிய கடைசி 4 சந்தர்ப்பங்களிலும் ஜோகோவிச் சம்பியனானது மற்றொரு சாதனையாகும். தொழில்முறை டென்னிஸ் ஆரம்பமான பின்னர் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் இந்த சாதனையை படைத்த முதலாவது வீரர் ஜோகோவிச் ஆவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM