(ஆர்.ராம்)
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் எதிர்வரும் புதன்கிழமை மீளாய்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில், எதிர்வரும் புதன்கிழமை காலை 9.00 மணி தொடக்கம், 12.30 மணி வரை இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரவையின் உலகளாவிய பருவகால மீளாய்வின் போதே, இலங்கை மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.
இந்த மீளாய்வு அமர்வில் பங்கேற்கும் இலங்கைத் தூதுக்குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்கவுள்ளார்.
அல்ஜீரியா, பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து, கட்டார், என்பன இலங்கையின் மீளாய்வுக்கான அறிக்கையிடல் பிரதிநிதிகளாகப் பணியாற்றும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய பருவகால மீளாய்வு பணிக்குழுவினால், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து நான்காவது தடவையாக பரிசீலனை செய்யப்படவுள்ளது.
கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகிய உலகளாவிய பருவகால மீளாய்வு கூட்ட அமர்வு பெப்ரவரி 03 ஆம் திகதி வரை நடைபெறும்.
இலங்கையின் முதலாவது பருவகால மீளாய்வு 2008 மே மாதமும், இரண்டாவது மீளாய்வு 2012 ஒக்டோபர் மாதமும், மூன்றாவது மீளாய்வு 2017 ஒக்டோபர் மாதமும் இடம்பெற்றிருந்தன.
மீளாய்வுக்குரிய நாட்டினால் வழங்கப்பட்ட தகவல்கள் அடங்கிய தேசிய அறிக்கை, விசேட நடைமுறைகள் என்று அறியப்படும சுயாதீன மனித உரிமைகள் நிபுணர்கள் மற்றும் அமைப்புகள், மனித உரிமைகள் ஒப்பந்த அமைப்புகள் மற்றும் வேறு ஐ.நா. அமைப்புகளின் அறிக்கைகளில் அடங்கியுள்ள தகவல்கள், தேசிய மனித உரிமைகள் அமைப்புகள், பிராந்திய அமைப்புகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் உள்ளிட்ட ஏனைய பங்காளிகளினால் வழங்கப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மீளாய்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM