மனிதாபிமான அடிப்படையில் படகுகளை விடுவியுங்கள் ; இந்திய, இலங்கை அரசுகளிடம் தமிழக மீனவர்கள் கோரிக்கை

Published By: Digital Desk 3

28 Jan, 2023 | 04:40 PM
image

(ஆர்.ராம்)

தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்கு இந்திய, இலங்கை அரசுகள் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாட்டு விசைப்படகு மீனவர் சங்க இராமநாதபுர மாவட்ட தலைவர் யேசுராசா தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கும் இடையில் எல்லைதாண்டி வந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டுள்ள 17 படகுகள் தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த வழக்கில் முன்னிலையாவதற்காக படகுகளின் உரிமையாளர்கள் உள்ளடங்கலாக 10 பேர் கொண்ட தமிழக மீனவர்கள் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளது.

இந்நிலையில், இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மீனவர்களின் படகுகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த படகுகளில் மூன்று அரசுடமை ஆக்கப்பட்டுள்ளது. ஏனைய படகுகள் தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தப் படகுகள் கைப்பற்றப்பட்டதன் பின்னர்  குறித்த படகுகளை நம்பி தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுக்கும் மீனவக் குடும்பங்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன.

தற்போது கூட, இரண்டு இலட்சம் ரூயஅp;பா செலவு செய்தே நீதிமன்றில் முன்னிலையாவதற்கு வருகை தந்திருக்கின்றார்கள். அத்துடன்ரூபவ் இவர்களின் படகுகள் முதற்தடவையாகவே தெரிந்தோ தெரியாமலோ இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்துவிட்டன.

ஆகவே,  குறித்த படகுகளின் உரிமையாளர்களையும் ரூபவ் அதனை நம்பி வாழ்வாதாரத்தினைக் கொண்டிருப்பவர்களையும் மனிதாபிமான ரீதியில் கருத்திற்கொண்டுரூபவ் சந்தர்ப்பமொன்றை வழங்க வேண்டும் என நாம் இலங்கை அரசாங்கத்தினைக் கோருகின்றோம்.

அத்துடன்,  இந்திய, இலங்கை அரசாங்கங்கள் கூட்டிணைந்து இந்த விடயத்தில் தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமெனவும் கோருகின்றோம். அத்துடன், இந்தப் படகுகள் மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்காது என்றும் உறுதி அளிக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13