ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் 

Published By: Nanthini

28 Jan, 2023 | 03:47 PM
image

ரிஷ் கல்யாண் கதாநாயனாக நடிக்க, தோனி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா படப்பிடிப்புடன் சென்னையில் பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது.

அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'லவ் டுடே' படப்புகழ் நடிகை இவானா நடிக்கிறார். இவர்களுடன் நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். திருமதி. சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right