கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் 50 பிராந்திய மையங்கள் நிறுவப்படும் அமைச்சர் டிரான் அலஸ்

Published By: Digital Desk 5

28 Jan, 2023 | 03:48 PM
image

நமது நிருபர்

கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் 50 பிராந்திய மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டிரான் அலஸ்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய நான்கு பிராந்திய அலுவலகங்களிலும், கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திலும், கடவுச்சீட்டு வழங்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

கடவுச்சீட்டு வழங்கும் பணியை வினைத்திறனாக்க பிரதேச செயலகங்களில் மேலும் 50 புதிய நிலையங்கள் அமைக்கப்படும். 

எந்தவொரு விண்ணப்பதாரரும் இந்த அலுவலகங்களுக்குச் சென்று உயிரியல் தரவுகள் மற்றும் புகைப்படங்களைக் கொடுத்தால் கடவுச்சீட்டை முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு இணையத்தில் பதிவு செய்து பல வாரங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றமைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் 

உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படும், இலத்திரனியல் அட்டை கொண்ட கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது.  இதற்கான அடிப்படை பணிகளை திணைக்களம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22