வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு

Published By: T. Saranya

28 Jan, 2023 | 03:35 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் பல்வேறு துறைகளில், குறிப்பாக கொழும்பு துறைமுகநகரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு உற்பத்தி ஆகியவற்றில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் ஃபர்ஹான் அல் சௌத்திடம் அழைப்புவிடுத்துள்ளார்.

சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌதின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை (23) சவுதி அரேபியாவிற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நேற்று வெள்ளிக்கிழமை (27) வரை அங்கு தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார்.

இச்சந்திப்புக்களின்போது இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நல்லுறவு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச கட்டமைப்புக்களில் குறிப்பாக 2009, 2012, 2014 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு சவூதி அரேபியா அளித்த ஆதரவிற்கும் நன்றி கூறினார். அதேபோன்று இலங்கையின் உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக சவூதி அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதியுதவி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியளிப்பு வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு வழங்கிய ஆதரவு ஆகியவற்றுக்கும் அமைச்சர் அலி சப்ரி தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

அதேபோன்று இலங்கையின் பல்வேறு துறைகளில், குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத்திலும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு உற்பத்தியிலும் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபிய முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

அதற்குப் பதிலளித்த சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர், இலங்கையும் சவூதி அரேபியாவும் உண்மையான நண்பர்கள் என்று குறிப்பிட்டதுடன் பல்வேறு சர்வதேச விவகாரங்களில் இருநாடுகளும் ஒரேவிதமான நிலைப்பாட்டைப் பின்பற்றுவதாக சுட்டிக்காட்டினார். அத்தோடு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு தாம் சவூதி அரேபியாவில் இயங்கும் வணிகங்களை ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி குறித்துக் கருத்து வெளியிட்ட சவூதி வெளிவிவகார அமைச்சர் ஃபர்ஹான் அல் சொளத், இப்போது இவ்விடயத்தில் இலங்கை அதன் நட்புநாடுகளிடமிருந்து நேர்மறையான பதிலைப் பெற்றுவருவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை...

2023-03-22 17:14:15
news-image

ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு...

2023-03-22 17:08:17
news-image

ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச்...

2023-03-22 17:07:15
news-image

வெசாக் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக...

2023-03-22 16:56:47
news-image

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தேனா?...

2023-03-22 17:12:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த...

2023-03-22 16:14:25
news-image

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் பெரும் தொகை...

2023-03-22 16:08:16
news-image

வெளியானது 5 ஆம் ஆண்டு புலமைப்...

2023-03-22 16:44:18
news-image

எழிலன் வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டது :...

2023-03-22 15:41:42
news-image

லிஸ்டீரியா நோய் நிலைமை நாட்டில் இல்லை...

2023-03-22 15:37:40
news-image

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்கவேண்டும்...

2023-03-22 15:07:09
news-image

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக...

2023-03-22 14:53:10