அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

Published By: T. Saranya

28 Jan, 2023 | 03:13 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் விவகார அதிகார சபை கடந்த 20ஆம் திகதி முட்டை  விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் காணப்பட்டது.

இருப்பினும் வர்த்தமானி அறிவித்தலையும் மீறி அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை அண்மையில் நாடாளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

அதன்படி தெஹிவளையில் பகுதியில்  கட்டுப்பாட்டு விலையையும் மீறி அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த  வர்த்தக நிலையத்திற்கு  5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க கல்கிஸ்ஸ  நீதவான் நீதிமன்றம்  தீர்மானித்துள்ளது.

அத்துடன் கொழும்பு பிரதேசங்களுக்கு முட்டைகளை கொண்டு வந்து விநியோகிக்கும் பிரதான வர்த்தக நிறுவனத்திற்கும் மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த மற்றும் சில்லறை முட்டைகளை விற்பனை செய்யும் கடையொன்றிற்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர்  நளின் பெர்னாண்டோ நிச்சயம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும். முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

நாங்கள் ஒரு நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும். எனினும் எங்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் அனுமதி கிடைத்தால் முட்டையை இறக்குமதி செய்வோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்...

2023-03-25 14:00:37
news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11