இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'பகாசூரன்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' ஆகிய படங்களின் இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'பகாசூரன்'. இதில் செல்வராகவன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இவருடன் நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராதாரவி, கே. ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பி.எல். தேனப்பன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். பாலியல் சுரண்டலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ஜி.எம் ஃபிலிம் கொப்பரேஷன் எனும் பட நிறுவனம் சார்பில் மோகன் ஜி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து கடந்த ஆண்டு வெளியீட்டுக்கு தயாராகியிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.
இதனிடையே 'பகாசூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ரக், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
அத்துடன் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகும் படைப்புகளுக்கு வட தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM