நடிகர் ஹிர்தூ ஹாரூன் நடிக்கும் 'தக்ஸ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Nanthini

28 Jan, 2023 | 02:27 PM
image

யாரிப்பாளர் ஷிபு தமின்ஸின் வாரிசும் நடிகருமான ஹிர்தூ ஹாரூன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'தக்ஸ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதனை தேசிய விருது பெற்ற நடிகையான கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

'ஹே சினாமிகா' பட இயக்குநர் பிருந்தா கோபால் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'தக்ஸ்'. இதில் ஹிர்தூ ஹாரூன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். 

இவருடன் சிம்ஹா, ஆர்.கே. சுரேஷ், முனீஸ்காந்த், நடிகை அனஸ்வரா ராஜன், சரத் அப்பாணி, பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். 

தமிழகத்தின் தென் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தை கதைக்கள பின்னணியாக கொண்டு தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச்.ஆர் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்திருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

முன்னோட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் வாழ்வியலை மையப்படுத்தி எக்ஷன் என்டர்டெய்னராக இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புரட்சி தலைவரின் பாராட்டைப் பெற்ற ‘எவன்?’...

2023-03-25 20:05:55
news-image

ஜெய் நடிக்கும் 'லேபிள்' எனும் இணையத்...

2023-03-25 13:30:04
news-image

‘பொன்னியின் செல்வன் 2' படத்தின் முன்னோட்டம்...

2023-03-25 13:22:11
news-image

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் மனோஜ் பாரதிராஜா

2023-03-25 13:01:41
news-image

'மாவீரன் பிள்ளை' திரைப்படத்தின் இசை வெளியீடு

2023-03-25 12:48:16
news-image

'வசீகரா...' பாடல் புகழ் பாடகி பாம்பே...

2023-03-24 17:00:01
news-image

செங்களம் - இணைய தொடர் விமர்சனம்

2023-03-24 16:01:08
news-image

விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் முதற்கட்ட...

2023-03-24 15:59:17
news-image

நடிகர் அஸ்வின் நடிக்கும் 'பீட்சா 3'...

2023-03-24 13:08:36
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்டு' படத்தின்...

2023-03-24 13:37:10
news-image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி'...

2023-03-24 13:38:00
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் 'தீராக் காதல்'...

2023-03-24 13:50:05