ஜான்சி வலைத்தள தொடரின் மூன்றாம் பாகம் விரைவில் தயாராகும் - நடிகர் கிருஷ்ணா

Published By: Nanthini

28 Jan, 2023 | 02:23 PM
image

டிகர் கிருஷ்ணாவின் தயாரிப்பில் வெளியான வலைத்தள தொடர் 'ஜான்சி'. இந்தத் தொடரின் முதல் பாகம் வெளியாகி ஓராண்டுக்குப் பிறகு அண்மையில் இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில் 'இந்த வலைத்தள தொடரின் மூன்றாம் பாகம் விரைவில் தயாராகும்' என தயாரிப்பாளரும் நடிகருமான கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.

'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'சமர்', 'நான் சிவப்பு மனிதன்' ஆகிய படங்களின் இயக்குநர் திரு இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் வலைத்தள தொடர் 'ஜான்சி'. 

இந்த தொடரில் நடிகைகள் அஞ்சலி, சாந்தினி சவுத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆதித்யா சிவ பிங், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

சாகசமும் துணிச்சலும் கொண்ட எக்ஷன் என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்த வலைத்தள தொடரின் முதல் பாகத்துக்கு தமிழை விட ஹிந்தி மொழியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 

தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாகம் ஹிந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 

ஹொலிவுட் சண்டை பயிற்சி கலைஞர் யானிக் பென்னின் எக்ஷன் காட்சிகளால் இந்த வலைத்தள தொடருக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் 'ஜான்சி' தொடர் குறித்து அதன் தயாரிப்பாளரான நடிகர் கிருஷ்ணா பேசுகையில், 

"டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் எங்களுடைய தயாரிப்பில் வெளியான 'ஜான்சி' எனும் வலைத்தள தொடரின் இரண்டு பாகங்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

இதனால் இந்த தொடரின் மூன்றாம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். 'பெல் பாட்டம்', 'ராயர் பரம்பரை' ஆகிய படங்கள் விரைவில் வெளியாகும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புரட்சி தலைவரின் பாராட்டைப் பெற்ற ‘எவன்?’...

2023-03-25 20:05:55
news-image

ஜெய் நடிக்கும் 'லேபிள்' எனும் இணையத்...

2023-03-25 13:30:04
news-image

‘பொன்னியின் செல்வன் 2' படத்தின் முன்னோட்டம்...

2023-03-25 13:22:11
news-image

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் மனோஜ் பாரதிராஜா

2023-03-25 13:01:41
news-image

'மாவீரன் பிள்ளை' திரைப்படத்தின் இசை வெளியீடு

2023-03-25 12:48:16
news-image

'வசீகரா...' பாடல் புகழ் பாடகி பாம்பே...

2023-03-24 17:00:01
news-image

செங்களம் - இணைய தொடர் விமர்சனம்

2023-03-24 16:01:08
news-image

விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் முதற்கட்ட...

2023-03-24 15:59:17
news-image

நடிகர் அஸ்வின் நடிக்கும் 'பீட்சா 3'...

2023-03-24 13:08:36
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்டு' படத்தின்...

2023-03-24 13:37:10
news-image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி'...

2023-03-24 13:38:00
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் 'தீராக் காதல்'...

2023-03-24 13:50:05