ஜேர்மனியின் பெர்லின் நகரில் உள்ள கிறிஸ்மஸ் சந்தைப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் சூத்திரதாரி இத்தாலியின் மிலான் நகரத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சும்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பெர்லின் நகரில் 12 பேரின் உயிரை பறித்த தாக்குதலை நடத்திய சந்தேக நபரான அனிஸ் அம்ரி அங்கிருந்து தப்பித்து செல்லும் நோக்கில் இத்தாலி வந்துள்ளார். 

முலான் நகரத்தில் பயணம் செய்த வாகனத்தை பொலிஸார் இடைநிறுத்தி அடையாள அட்டைகளை பரிசோதிக்க முற்பட்ட நிலையில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பொலிஸாரை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளார். அத்தோடு அல்லாஹ் வூ அக்பர் என சத்தமிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் கிறிஸ்டியன் மோவியோ என்ற பொலிஸ் அதிகாரியின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் கயமடைந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்த மற்றுமாரு பொலிஸ் அதிகாரியான லுகா ஸ்காடா என்ற சேவையில் இணைந்து நான்கு மாதங்களே ஆன பயிற்சி பெற்றுவரும் பொலிஸ் அதிகாரி அம்ரியை சுட்டுக்கொன்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இத்தாலியின் உள்துறை அமைச்சர் மார்க்கோ மின்ஹிட்டி கூறுகையில் 2011 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குள் வந்துள்ள குறித்த சந்தேக நபர் தன்னை மூன்று நாட்டு பிரஜையாக அடையாளப்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். சுடப்பட்டவர் நிச்சயமாக பெர்லின் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படுபவரே ஆவார் என்றார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதான அம்ரி இதற்கு முன்பு டூனிஸியாவில் திருட்டு சம்பவத்திற்காக தண்டனைப்பெற்று அதிலிருந்து தப்பிப்பதற்காக இத்தாலி வந்தவராவார் என ஜேர்மனிய ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி பல்வேறு குற்றங்களுடன் இவர் தொடர்பு பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அத்தோடு பெர்லின் தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில் குறித்த தீவிரவாத சந்தேக நபர் குற்றம் புரிந்த நான்கு நாட்களுக்கு பிறகு கொலைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.