அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை எதிரொலியாக, அதானி குழுமம் இரண்டே நாட்களில் 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.
அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்கள் முறைகேடான நடவடிக்கை மூலம் பங்குச்சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதித்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த புதன்கிழமை ஆய்வறிக்கை வெளியிட்டது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை திரும்ப பெற்றதால் மும்பை பங்கு சந்தையில் அந்த நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது.
அதன்படி அதானி எரிவாயு நிறுவன பங்குகள் 20 சதவீதமும், அதானி பசுமை எரிசக்தி நிறுவன பங்குகள் 19.99 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன. அதானி வணிக நிறுவன பங்குகள் 18.52 சதவீமும், அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவன பங்குகள் 16 சதவீமும் வீழ்ச்சியை சந்தித்தன.
இதனால் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் வீழ்ச்சியடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டார்.
இந்நிலையில் போதிய ஆய்வு செய்யாமல் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை வெளியிட்டதாக குற்றம்சாட்டியள்ள அதானி குழுமம், இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது. 2 ஆண்டு கால தீவிர ஆய்வுக்குப் பிறகே அந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதாகவும், அமெரிக்காவிலுள்ள நீதிமன்றத்திலேயே அதானி குழுமம் வழக்கு தொடரலாம் என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM