சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடக்கிவைத்த வை.ஜி. மகேந்திராவின் 'சாருகேசி'

Published By: Nanthini

29 Jan, 2023 | 09:44 AM
image

மிழ் திரையுலகின் மூத்த நகைச்சுவை நடிகரும் சிறந்த குணச்சித்திர நடிகருமான வை.ஜி. மகேந்திரா இயக்கி, நடிக்கவிருக்கும் 'சாருகேசி' திரைப்படத்தினை சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்ளாப் அடித்து தொடக்கி வைத்தார்.

நாடக உலகில் தனித்துவம் மிக்க படைப்பாளியாக மிளிர்பவர் வை.ஜி. மகேந்திரா. இவரது எழுத்து, இயக்கத்தில் தயாராகி, பிரபலமான நாடகம் 'சாருகேசி'. 

இந்த நாடகம் தற்போது திரைப்படமாக உருவாகி வருவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற நிகழ்வு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்குபற்றி இத்திரைப்படத்தை க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார்.

இதன்போது அவர் பேசியதாவது:

"1975ஆம் ஆண்டில் 'ரகசியம் பரம ரகசியம்' எனும் மேடை நாடகத்தை பார்க்க சென்றபோது எம்மை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால், தற்போது 'சாருகேசி' நாடகத்தின் ஐம்பதாவது மேடையேற்றத்தின்போது சிறப்பு அதிதியாக பங்குபற்றியிருக்கிறேன். இவை அனைத்தும் காலத்தின் செயல். 

மறைந்த கலைஞர்களான நாகேஷ், சோ, விசு, ஜெயலலிதா போன்றவர்கள் வை.ஜி. மகேந்திராவின் UAA நாடக குழுவில் பணியாற்றியவர்கள். இந்த நாடகக் குழு மிகவும் கட்டுக்கோப்பான குழுவாகும். இதில் மெத்த படித்தவர்கள் முதல் பலதுறை வல்லுநர்கள் வரை இடம்பெற்றிருந்தனர். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிருடன் இருந்திருந்தால், இந்த நாடகம் மற்றுமொரு வியட்நாம் வீடாக இருந்திருக்கும். 

இந்த நாடகத்தை பொருத்தவரையில், கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள் அவர்களது குணத்துக்கு உண்டான வசனங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. வை.ஜி. மகேந்திராவை தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்தவில்லை என்ற எண்ணம் எமக்கு இருக்கிறது. 

இந்த நாடகம் திரைப்படமாக உருவாகும்போது மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. இந்த திரைப்படத்துக்கு வசந்த் திரைக்கதை எழுதி இருக்கிறார்.

எம்முடைய திருமணம் நடைபெறுவதற்கு  மகேந்திரா தான் பிரதான காரணம். புகை, மது, அசைவ உணவு பழக்கம் போன்றவை ஒரு காலத்தில் என்னுடன் இருந்தன. சைவ உணவு உண்பவர்களை பார்த்தால் எமக்கு பாவமாக இருக்கும். 

என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா தான். புகை, மது போன்ற உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை கைவிட்டுவிடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

அல்சைமர் எனும் நினைவு திறனிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஓர் இசைக் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி 'சாருகேசி' படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 

இந்த நாடகத்தை எஸ்.ஏ.ஆர்.பி. பிக்சர் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்த் எஸ். சாய் திரைக்கதை அமைத்து, மேற்பார்வை இயக்குநராகவும் பணியாற்றவிருக்கிறார். 

வை.ஜி. மகேந்திரா கதாநாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35