இதயத்துடிப்பு சீராக இயங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நவீன கருவி

Published By: Ponmalar

28 Jan, 2023 | 01:21 PM
image

எம்மில் பலரும் இதயத் துடிப்பு, சம சீரற்றத்தன்மையுடன் இருந்தால் அவர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் பல பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், பேஸ்மேக்கர் எனும் கருவியின் உதவியுடன் இதயத்துடிப்பினை சீராக இயங்குவதற்கான சிகிச்சையை மேற்கொள்வர்.

இதன் போது ஏற்படும் பல அசௌகரியங்களை மனதில் கொண்டு தற்போது சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், லீட்லெஸ் பேஸ்மேக்கர்  எனப்படும் சிறிய வடிவிலான நவீன பேஸ்மேக்கர் எனும் கருவியை கண்டறிந்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக சத்திர சிகிச்சையின் கால அளவு குறைவதுடன், பலனும் நிறைவாக கிடைக்கும் என மருத்துவர் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பல்வேறு காரணங்களால் எம்மில் சிலருக்கு இதய துடிப்பில் மாற்றம் ஏற்பட்டு, இதயம் தொடர்பான பாதிப்புகள் உண்டாகிறது.

இந்நிலையில் மருத்துவர்கள் இதயத்துடிப்பு அதிகமாகவோ.. குறைவாகவோ... இயங்காதிருக்கும் வகையிலும், சீராக இருப்பதற்கும் இதயத்தின் ஒரு பகுதியில் பேஸ்மேக்கர் எனும் கருதியினை பொருத்துவர்.

இந்த கருவியின் மூலமாக கிடைக்கும் மின் தூண்டலைப் பெற்று இதயத்துடிப்பு சீராக இயங்கும். இந்த பேஸ்மேக்கர் எனும் கருவி பொருத்தப்பட்டிருந்தால் அந்த நோயாளிகளுக்கு நாளாந்த வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.

ஆனால் தற்போது கண்டறியப்பட்டிருக்கும் லீட்லெஸ் பேஸ்மேக்கர் எனும் கருவி, அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த கருவி நேரடியாக இதய பகுதியில் பொருத்தப்படுகிறது. இதற்கான சத்திர சிகிச்சையின் கால அளவு 30 நிமிடம் மட்டும் தான். மேலும் சத்திர சிகிச்சையின் போது கதீட்டர் ஒன்றின் மூலமாக இதயத்தின் உள்பகுதியில் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் துல்லியமாக பொருத்தப்படுகிறது. இந்த கருவி மூலம் இதயத் துடிப்பு சீராக்கப்படுகிறது.

டொக்டர் தீப் சந்த் ராஜா

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32