சாந்தினி தமிழரசன் நடிக்கும் 'குடிமகான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Nanthini

28 Jan, 2023 | 01:09 PM
image

றிமுக நடிகர் விஜய் சிவன் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குடிமகான்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர்கள் வெற்றிமாறன், அருண் ராஜா காமராஜ், விருமாண்டி, சண்முகம், பிரசாந்த் ஆகியோர் இணைந்து, அவர்களது இணைய பக்கத்தில் வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் என். பிரகாஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'குடிமகான்'. இதில் விஜய் சிவன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, கே.பி.வை. ஹொனஸ்ட் ராஜ், புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு தனுஷ் மேனன் இசையமைத்திருக்கிறார். மது அருந்துபவர்களை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை சினாரியோ மீடியா வொர்க்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் விஜய் சிவன் தயாரித்திருக்கிறார்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், 

"இன்றைய திகதியில் தமிழ் சமூகத்தில் மது அருந்துவது என்பது இயல்பானதாகிவிட்டது. இந்நிலையில் குடிமகன் ஒருவர் குடிமகானாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையில் தான் இப்படத்தின் திரைக்கதை உருவாகியிருக்கிறது. முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் 'குடிமகான்' தயாராகியிருக்கிறது'' என்றார்.

இப்படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37