தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த இயக்குநர்களில் தனித்துவமான அடையாளத்துடன் பவனிவரும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் 'விடுதலை' திரைப்படத்தின் புதிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
முன்னணி நகைச்சுவை நடிகரான சூரி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'விடுதலை'.
இந்த திரைப்படத்தில் அவருடன் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், பாலா, ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை தழுவி தயாராகும் 'விடுதலை' திரைப்படத்தை ஆர்.எஸ். இன்போடெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.
இரண்டு பாகங்களாக தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியிருக்கிறது.
இதன் முதற்கட்டமாக படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும் பணிகள் சென்னையில் தொடங்கியிருக்கிறது. இதற்கான பிரத்தியேக நிகழ்வில் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், படத்தின் நாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி உள்ளிட்ட படக் குழுவினர் பங்குபற்றினர்.
வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி,-ஜீ.வி. பிரகாஷ் குமார் கூட்டணியில் இரண்டு பாகங்களாக தயாராகும் 'விடுதலை' படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM