யோகி பாபு நடிக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Nanthini

28 Jan, 2023 | 12:48 PM
image

மிழின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு 'மெடிக்கல் மிராக்கல்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'A1', 'பாரீஸ் ஜெயராஜ்' ஆகிய படங்களின் இயக்குநர் கே. ஜொன்சன் இயக்கத்தில் தயாராகும் 'மெடிக்கல் மிராக்கல்' படத்தில் யோகி பாபுவுடன் நடிக்கும் நடிகைகள் மற்றும் ஏனைய நடிகர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். 

எஸ். மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் இந்த படத்தை ஏ ஒன் லைஃப் என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ஜொன்சன் தயாரிக்கிறார். 

ஜலந்தர் காசி விஸ்வநாதன் இப்படத்துக்கு இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

சந்தானம் நடிப்பில் வெளியான இரண்டு வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ‍ஜொன்சன் முதன்முறையாக தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' படத்தின் வெற்றி உறுதியென யோகி பாபுவின் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37