(ஏ.என்.ஐ)
எதிர்வரும் மே 4 மற்றும் 5ஆம் திகதிகளில் கோவாவில் நடைபெறவுள்ள வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்தியா முறைப்படி அழைப்பிதழ் அனுப்பியுள்ளது.
இந்த அழைப்பிதழில் சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சர் குயின் கேங் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஆகியோருக்கான அழைப்புகளும் உள்ளடங்குகின்றன.
கடந்த ஆண்டு செப்டெம்பரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் குழுவின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது,
மேலும், இந்த ஆண்டு முக்கிய அமைச்சர்களின் கூட்டங்கள் மற்றும் உச்சிமாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்மாத இறுதியில் மும்பையில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழாவில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை.
அனைத்து நாடுகளும் உள்ளீடுகளை அனுப்பியுள்ள நிலையில், குழுவின் மூன்றாவது திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு எந்தப் படத்தையும் அனுப்பாத ஒரே நாடு பாகிஸ்தான் ஆகும்.
பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல ஆண்டுகளாக ஆபத்தான நிலையில் உள்ளன.
இஸ்லாமாபாத் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் முன்னாள் இந்திய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு 370ஆவது பிரிவை மீட்டெடுக்க முயன்று வருகிறது.
20 ஆண்டுகள் பழமையான இந்த அமைப்பில் ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் நான்கு மத்திய ஆசிய நாடுகள் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன. ஈரான் தான் சமீபத்தில் உறுப்பினராக உள்ளது.
இந்திய தலைமைத்துவத்தின் கீழ் குழுவின் கூட்டத்தில் முதல் முறையாக முழு அளவிலான உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கடைசிக் கூட்டம் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகருக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM