மட்டு கரடியனாற்றில் 16 மாடுகள் கடத்தல் ; மாட்டுகன்று எரிந்த நிலையில் மீட்பு

Published By: Digital Desk 3

28 Jan, 2023 | 12:49 PM
image

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள  காருமலை பிரதேச மாட்டுபட்டியில் இருந்த 47 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 16 எருமை மாடுகளை கால்நடையாக கடத்தி சென்று விற்பனை செய்த இளைஞன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்ததுடன்  தோல் கம்பனியில்  எரிக்கப்பட்ட நிலையில் மாட்டுகன்றுகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21ம் திகதி கன்றுதாச்சியான மாடுகள் உட்பட 16 மாடுகள் காணாமல் போனதைதொடர்ந்து அதனை தேடிய நிலையில் கரடியனாறு செங்கலடி பிரதான வீதியில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிரி கமராக்களை சோதனையிட்டபொது மாடுகளை இருவர் கால்நடையாக கடத்திச் செல்லும் காணொளி பதிவாகியுள்ளதையடுத்து மாடுகடத்தும் குழுவைச் சேர்ந்த  கித்துள் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்தவரிடம் மேற்கொண்ட விசாரணையில்  கடத்திச் சென்ற மாடுகளை ஏறாவூர் தளவாயிலுள்ள தோல் பதனிடும் கம்பனியிடம் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, பொலிஸார் அந்த கம்பனியை சுற்றிவளைத்த போது  கடத்தப்பட்ட மாடுகளை வெட்டி இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், வெட்டப்பட்ட கன்றுதாச்சி மாடுகளின் வயிற்றில் இருந்த கன்றுகள் அந்த பகுதி நிலத்தில் எரியூட்டப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

தோல் கம்பனி உரிமையாளர் மற்றும் மாடுகடத்தலில் ஈடுபட்ட கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த  இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும்  நீண்ட காலமமாக கரடியனாறு பகுதியில் மாடு மற்றும் ஆடு கடத்தலில்  குழு ஒன்று இயங்கிவந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கரடியனாறு பிரதேசத்தில் நேற்று 8 மாடுகளை காணவில்லை என அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும்...

2025-01-25 17:23:37
news-image

நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சிமன்றத்...

2025-01-25 19:08:44
news-image

அதானியின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து...

2025-01-25 19:07:42
news-image

ஊழல், மோசடி விசாரணை கோப்புக்கள் மீளத்...

2025-01-25 17:35:45
news-image

புலிகளின் மீள் எழுச்சி குறித்த தகவல்கள்...

2025-01-25 17:29:59
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்...

2025-01-25 21:57:28
news-image

துறைமுகத்தில் 2,724 கொள்கலன்கள் தேக்கம் இதுவரை...

2025-01-25 17:16:14
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு செல்லப்பிராணிகளை குறைகூறுவது வெட்கக்கேடான...

2025-01-25 19:05:39
news-image

மோசடியாளர்களை கைது செய்யும்போது அரசியல் பழிவாங்கல்...

2025-01-25 17:11:05
news-image

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு...

2025-01-25 17:28:34
news-image

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய...

2025-01-25 17:20:58
news-image

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட...

2025-01-25 17:12:59