நேர்காணலுக்குச் செல்லும் பெண்களின் கவனத்திற்கு...

Published By: Ponmalar

28 Jan, 2023 | 11:54 AM
image

'நம்மை முதலில் பார்க்கும்போது, அடுத்தவர்களுக்குத் தோன்றும் எண்ணம் தான் நிலையானது' என்கின்றனர், உளவியல் நிபுணர்கள்.

வேலைவாய்ப்பு நேர்காணல்களைப் பொறுத்தவரை இது முற்றிலும் உண்மை. நீங்கள் எப்படி உடை அணிகிறீர்கள், எப்படி நடந்து கொள்கிறீர்கள், எப்படி தோற்றம் தருகிறீர்கள் என எல்லாமே உங்கள் நேர்காணலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

குறிப்பாகப் பெண்களின் கூந்தல் அலங்காரம் எப்படி அமைகிறது என்பது, வேலை வாய்ப்பு அளிக்க உள்ள நிறுவன அதிகாரி மீது மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகிறது. நேர்காணலில் நீங்கள் பதில் சொல்வது போலவே, சிகை அலங்காரமும் முக்கியமானது. 

எந்த நிறுவனமும், சரியாக பராமரிக்கப்படாத கூந்தலைக் கொண்ட ஊழியர்களை விரும்புவதில்லை என்பதால், உங்கள் கூந்தல் அலங்காரத்தில் கவனம் செலுத்துங்கள். 

குறைவான, அழகான மேக்கப்புடன், ஆர்ப்பாட்டம் இல்லாத, முகத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரம் நீங்கள் சிறந்த தோற்றம் பெற்று விளங்க மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் மிகவும் குறைந்த நேரத்தில் செய்து கொள்ளக்கூடிய ஆனால், தொழில்முறை தன்மையோடு அழகான தோற்றத்தைப் பெற உதவும் மூன்று எளிய கூந்தல் அலங்காரங்களை உங்களுக்காகத் தேர்வு செய்து வழங்குகிறோம். 

* கொண்டை ( ஸ்லீக் லோ பன்) கொண்டை, அலுவலக நோக்கிலான உடைகளுடன் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய கூந்தல் அலங்காரம். ஏனெனில் இது சிக்கல் இல்லாதது மற்றும் காற்றில் பறக்கும் முடியையும் கட்டுப்படுத்துகிறது. கழுத்து அளவில் தாழ்வாகக் கொண்டை அமைத்துக்கொள்வது, சிக்கென, நவீனத்தன்மையோடு இருக்கும். அதே நேரத்தில் தொழில்முறை தன்மையையும் கொண்டிருக்கும். 

இந்த தோற்றம் பெற... நல்ல சீப்பு கொண்டு தலைமுடியை வாரி, தலை முடி அனைத்தையும் ஒன்றாக்கி, உங்கள் கழுத்து அளவில் குதிரை வாலாக அமைத்துக்கொள்ளவும்.

இந்த குதிரை வால் பின்னலைச் சுருட்டி கொண்டையாக்கி, 'பின்' குத்திக்கொள்ளவும். சிடுக்கு உள்ள முடி எனில், செட்டிங் ஸ்பிரே பயன்படுத்தி சீராக்கி கொள்ளவும். 

* குதிரை வால் (போனி டெயில்) சரியான முறையில் அமைத்துக்கொண்டால், வேலைவாய்ப்பு நேர்காணலுக்குக் குதிரை வால் கூந்தல் அலங்காரம் மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த கூந்தல் அலங்காரத்திற்கு நேர்த்தியான தோற்றம் தேவை. ஆன்டி பிரிஸ் கிரீம் (anti frizz cream) அல்லது ஸ்டலிங் பொருள் மூலம் இதை நிறைவேற்றிக்கொள்ளலாம். 

இந்த தோற்றம் பெற... உங்கள் தலைமுடியை நேராக்கி, தலைமுடி முழுவதும் ஆன்டி பிரஸ் கிரீம் தடவிக்கொள்ளவும். தலைமுடியை மொத்தமாக இறுகப்பற்றி குதிரை வாலாக்கி, உங்களுக்கு விருப்பமான உயரத்தில் அதை சுற்றி இறுக்கமாக்கிக் கொள்ளவும். உங்கள் தலையின் கீழ்ப்பகுதியிலிருந்து கொஞ்சம் முடி எடுத்து, அதை கூந்தல் அலங்காரத்தைச் சுற்றி அமைத்து நேர்த்தியான தோற்றத்தை உண்டாக்கிக் கொள்ளவும். 

* முன்பக்க தலைமுடி (டிவிஸ்டட்) இந்த கூந்தல் அலங்காரம் மிகவும் நேர்த்தியாகத் தோன்றக்கூடியது, உடனடியாக தொழில்முறை தோற்றம் தரக்கூடியது. இந்த எளிதான கூந்தல் அலங்காரத்துடன், கண் அலங்காரம் மற்றும் நியூட் லிப்ஸ்டிக் அணிந்து கொண்டால் இன்னும் அசத்தலாக இருக்கும். 

இந்த தோற்றம் பெற... உங்கள் தலைமுடியை டிரையர் கொண்டு நன்றாகக் காய வைத்து, கீழ்ப்பகுதியில் சுருள் முடியை உருவாக்கிக் கொள்ளவும். சீப்பு கொண்டு முன்பக்க முடியை அமைத்து, அதைப் பின்பக்கமாக இழுத்து, 'பின்' குத்திக்கொள்ளவும். செட்டிங் ஸ்பிரே மூலம் 'பினிஷ்' செய்யவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்