3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டன

Published By: T. Saranya

28 Jan, 2023 | 11:21 AM
image

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட 03 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

மேலும், நான்கு படகுகளுக்கான தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் 17 படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

படகுரிமை வழக்கிற்காக இராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கொண்ட குழு நேற்று மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

படகுகளுக்கான உரிமை கோரும் மூன்று வழக்குகளில் உரிமையாளர்கள் முன்னிலையாகாததால், மூன்று படகுகளும் அரசுடைமையாக்கப்படுவதாக ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

2021 டிசம்பர் மாதம் கைப்பற்றப்பட்ட குறித்த படகுகள் தொடர்பில் இதற்கு முன்னர் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போதும், படகு உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

மேலும் நான்கு படகுகளுக்கான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவற்றின் உரிமையாளர்கள் மன்றில் ஆஜராகினர்.

வழக்கின் சாட்சியாளர்களிடம் நேற்று மன்றில் சாட்சியம் பெறப்பட்டதுடன், சாட்சியினை சட்டத்தரணி அருட்பிரகாசம் நிரோசன் மன்றில் நெறிப்படுத்தினார்.

சாட்சியங்களை ஆராய்ந்த நீதவான் குறித்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

மன்றில் முன்னிலையாகியிருந்த நான்கு படகுகளின் உரிமையாளர்களின் வழக்கு ஜனவரி 31 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் படகின் உரிமையாளர்களை மன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கால வரையறையின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை...

2023-03-23 17:24:22
news-image

20 இலட்சம் முட்டைகள் இறக்குமதி :...

2023-03-23 16:37:54
news-image

7,500 ரூபாவாக குறைவடையும் 50 கிலோ...

2023-03-23 16:49:28
news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14