இந்தியாவின் அபாரமான பொருளாதார வளர்ச்சியை பாகிஸ்தான் அங்கீகரிக்க வேண்டும்

Published By: Digital Desk 3

28 Jan, 2023 | 11:10 AM
image

(ஏ.என்.ஐ)

பாகிஸ்தானின் இராணுவம், அதிகாரத்துவம், அரசியல், வணிகம் மற்றும் பிற அனைத்தும்  சிதைவடைந்து, செயலிழந்து மற்றும் தோல்வியுற்ற நிலையை கவனத்தில் கொண்டு மீளாய்வுக்கு செல்ல வேண்டிய தருணமாகவே இன்றைய காலக்கட்டம் காணப்படுகிறது. ஒரு நாடாக இந்தியாவின் நம்பமுடியாத  அபாரமான வளர்ச்சியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று மோஷரஃப் ஜைதி குறிப்பிட்டுள்ளார்.

1999 இல், ஜெனரல் முஷாரப் பாகிஸ்தான் மக்களை கார்கில் மீது தவறாக  தூண்டியபோது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 450 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருந்தது. ஆனால் இப்போது அது 3.18 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது என்றும் ஜைதி கூறினார்.

உலக மேசையில் அமரும் இந்தியாவின் திறமை வேறு அளவில் உள்ளது. பாகிஸ்தான் கிட்டத்தட்ட ஒன்று- இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்கு 350 பில்லியன் அமெரிக்க டொலர்கள்  மட்டுமே. அதே நேரத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

2030க்குள் அல்லது ஏழு ஆண்டுகளுக்குள், இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய வருமானம் தற்போதைய 3.18 டிரில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து கிட்டத்தட்ட 8 டிரில்லியன் டொலர்களாக உயரும் என்று மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. இந்தியா தற்போது உலகளாவிய ஏற்றுமதியில் 2.2 சதவீதத்தைக் கொண்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் இது உலகளாவிய ஏற்றுமதியில் 4.5 சதவீதமாக உயரும் என மோர்கன் ஸ்டான்லி எதிர்பார்க்கிறது.

அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் சில்லறை சந்தையானது 1.8 டிரில்லியன் அமெரிக்க டொலராக இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய...

2024-04-12 21:26:07
news-image

100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் குரூஸ்...

2024-04-12 20:28:07
news-image

மறு அறிவிப்பு வரும் வரை ஈரான்...

2024-04-12 19:37:59
news-image

இன்று அல்லது நாளை இஸ்ரேலின் தென்பகுதி...

2024-04-12 16:50:03
news-image

இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ளும் எண்ணத்தை...

2024-04-12 11:07:27
news-image

கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள் என கேட்பதா?”...

2024-04-12 08:55:18
news-image

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளலாம்...

2024-04-12 08:39:30
news-image

தென்கொரிய பொதுத்தேர்தல் - ஆளும் கட்சி...

2024-04-11 12:20:12
news-image

ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட...

2024-04-11 11:37:34
news-image

'கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்?' - திக்விஜய்...

2024-04-11 10:00:15
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் புதல்வர்கள்...

2024-04-10 21:52:35
news-image

கச்சதீவை இலங்கைக்கு திமுகவும் காங்கிரஸ் கட்சியும்...

2024-04-10 14:15:01