சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில் ஒரே ஜனாதிபதி கோட்டாபய - உதய கம்மன்பில

Published By: T. Saranya

28 Jan, 2023 | 10:55 AM
image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவை தீர்மானங்கள் ராஜபக்ஷ குடும்பத்தின் இரவு விருந்து உபசாரத்தின் ஊடாக எடுக்கப்பட்டது. ராஜபக்ஷ குடும்ப ஆதிக்கத்தினால் 69 இலட்ச மக்களின் அரசியல் தீர்மானம் சூன்யமானது. சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில் ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இடம் பிடித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பல்வேறு நோக்கங்களுக்கு மத்தியில் நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்கள் தோல்வியடைவதற்கு குடும்ப ஆட்சி பிரதான காரணமாக அமைந்தது,ஆகவே 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பாடம் கற்றுக்கொண்டிருப்பார்கள் என எதிர்பார்த்தோம். இருப்பினும் எமது நிலைப்பாடு இறுதியில் தவறானது.

2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமைச்சரவையில் ராஜபக்ஷர்கள் தான் அதிக ஆதிக்கம் கொண்டிருந்தார்கள்.சிரேஷ்ட அமைச்சர்கள் ராஜபக்ஷர்களின் இளவரசரான நாமல் ராஜபக்ஷவிடம் ஆலோசனை பெற வேண்டிய சூழலை கோட்டாபய ராஜபக்ஷ ஏற்படுத்தினார்.

அமைச்சரவையில் பொருளாதார துறைசார் நிபுணர்கள் அங்கம் வகித்த போதும் நிதி நிலைமை தொடர்பில் அடிப்படை தகைமை கூட இல்லாத பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதுடன் 55 அரச திணைக்களங்கள் அனைத்தும் அவரது பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

ராஜபக்ஷர்கள் அமைச்சரவை முழுமையாக ஆக்கிரமித்தமை தொடர்பில் வாராந்தம் இடம் பெறும் கட்சி தலைவர் கூட்டம் இரத்து செய்யப்பட்டது. அமைச்சரவை கூட்டம் ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர்களின் இரவு விருந்து உபசாரத்தின் ஊடாக எடுக்கப்பட்டது.

தவறான பொருளாதார தீர்மானங்கள் முழு நாட்டையும் சீரழிக்கும் என நாங்கள் எடுத்துரைத்ததை தொடர்ந்து நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது சகோதரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முறையிட்டார்.சகோதரரின் தவறான ஆலோசனைகளை கேட்டு கோட்டாபய ராஜபக்ஷ எங்களை பதவி நீக்கினார்.எம்மை பதவி நீக்கி விட்டு மூன்று மாதத்திற்கு பின்னர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நிலை அவருக்கு ஏற்பட்டது.

ராஜபக்ஷர்களின் குடும்ப ஆதிக்கத்தினால் 69 இலட்ச மக்களின் அரசியல் தீர்மானம் சூன்யமாக்கப்பட்டது.போராட்டத்தின் ஊடாக ராஜபக்ஷர்களை மக்கள் புறக்கணித்தார்கள்,ஆனால் ராஜபக்ஷர்களை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ராஜபக்ஷர்களின் தவறான பொருளாதார கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்பற்றுகிறார்.மக்கள் படும் துயரத்தை அவர் கண்டு கொள்ளவில்லை,ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அல்ல,தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைய நேரிடும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிவார் அதனால் தான் தேர்தலை பிற்போட சூழ்ச்சி செய்கிறார்.கௌரவமான முறையில் செயற்பட்டால் இறுதி காலத்தை கௌரவமாக கழிக்கலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23
news-image

மகனின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற...

2023-03-23 13:32:04
news-image

அம்பாறையில் புடவைக்கடையில் தீ விபத்து

2023-03-23 11:47:29
news-image

சமாதானம், நல்லிணக்கத்திற்கான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச்...

2023-03-23 15:59:03
news-image

வாய்மூல விடைக்கான கேள்விகளை காணி வழக்கு...

2023-03-23 12:23:34