(எம்.மனோசித்ரா)
மாற்றத்திற்கான செயற்பாடுகளை உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலிருந்து நாம் ஆரம்பிப்போம். அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி குருணாகலில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு பிரதான காரணம் பொதுஜன பெரமுன மற்றும் ஜே.வி.பி.யின் செயற்பாடுகளேயாகும். 2005 இல் ராஜபக்ஷ ஆட்சியமைப்பதற்கு ஜே.வி.பி. பெரும் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது.
எனவே நாட்டை மீட்கக் கூடிய பலம் கொண்ட ஒரேயொரு கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். இதனை நாம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களிலிருந்தே ஆரம்பிக்கவுள்ளோம். அனைத்து பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வினை வழங்குவோம்.
அதற்கமைய எதிர்வரும் 29 ஆம் திகதி குருணாகலில் எமது முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM