ஜெரூசலேமில் யூதவழிபாட்டுதலத்தில் துப்பாக்கி பிரயோகம் - ஏழுபேர் பலி

Published By: Rajeeban

28 Jan, 2023 | 05:06 AM
image

கிழக்கு ஜெரூசலேமில் யூத வழிபாட்டுத்தலமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிதாக்குதலில் ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நெவே யகோவ் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை மேற்கொண்டவர் பயங்கரவாதி என தெரிவித்துள்ள  பொலிஸார் அவரை செயல்இழக்க செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கிழக்குஜெரூசலேமை சேர்ந்த பாலஸ்தீனியரே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரியொருவர் கடந்த சில வருடங்களில் நாங்கள் எதிர்கொண்ட மோசமான தாக்குதல் இதுவென குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு ஜெரூசலேமில் உள்ள யூதகுடியேற்றவாசிகள் யூதவழிபாட்டுத்தலத்தில் வழிபாடுகளை முடித்துவிட்டு வெளியேறும் தருணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை மேற்கொண்டவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்டவர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் வெள்ளை காரை  அதிகாரிகள் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் இந்த தாக்குதலை வரவேற்றுள்ளன எனினும் உரிமை கோரவில்லை.

மேற்கு கரையிலும் காஜா பள்ளத்தாக்கிலும் பாலஸ்தீனியர்கள் இந்த தாக்குதலை வரவேற்றுள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17