மகளிர் இருபது 20 உலகக் கிண்ணத்தில் பெண் மத்தியஸ்தர்கள்: இலங்கையிலிருந்து இருவர்; தமிழகத்திலிருந்து ஒருவர்!

Published By: Nanthini

27 Jan, 2023 | 08:31 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் முழுவதும் பெண்களை கொண்ட மத்தியஸ்தர்கள் கடமையாற்றவுள்ளதுடன், இலங்கையர் இருவருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் பெண்கள் மாத்திரம் மத்தியஸ்தர்களாக செயற்படவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

மிச்செல் பெரெய்ரா பொது மத்தியஸ்தராகவும் நிமாலி பெரேரா கள மத்தியஸ்தராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கைக்கு பெருமை சேர்ப்பதாக அமைகிறது.

அதேவேளை, தமிழகத்தின் சென்னையை சேர்ந்த நாராயணன் ஜனனியும் கள மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதலாவது பெண் பொது மத்தியஸ்தராக 2019இல் நியமிக்கப்பட்ட இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த காந்திகோட சர்வ லக்ஷ்மி, 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது உலகக் கிண்ண கிரிக்கெட்டிலும் பொது மத்தியஸ்தராக கடமையாற்றவுள்ளார்.

மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கடமையாற்ற 3 பொது மத்தியஸ்தர்களும் 10 கள மத்தியஸ்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெள்ளிக்கிழமை (27) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐசிசி பொது முகாமையாளர் வசிம் கான், 

"மகளிர் இருபது 20 உலகக் கிண்ண சுற்றுப் போட்டிக்கு முழுமையாக பெண்களைக் கொண்ட மத்தியஸ்த குழாத்தை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

மத்தியஸ்தர்கள் விபரம்

பொது மத்தியஸ்தர்கள்: ஜீ.எஸ். லக்ஷ்மி (இந்தியா), ஷண்ட்ரே ஃப்ரிஸ் (தென் ஆபிரிக்கா), மிச்செல் பெரெய்ரா (இலங்கை).

கள மத்தியஸ்தர்கள்: சூ ரெட்ஃபேர்ன் (இங்கிலாந்து), எலொய்ஸ் ஷெரிடான் (அவுஸ்திரேலியா), க்ளயார் போலோசக் (அவுஸ்திரேலியா), ஜெக்குலின் வில்லியம்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), கிம் கொட்ன் (நியூஸிலாந்து), லோரென் ஏஜென்பேர்க் (தென் ஆபிரிக்கா), அனா ஹெரிஸ் (இங்கிலாந்து), விரிண்டா ரத்தி (இந்தியா), என். ஜனனி (இந்தியா), நிமாலி பெரேரா (இலங்கை)

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட்; பிரிதொரு...

2023-03-24 13:46:54
news-image

ஆஸி. ஆரம்பத் துடுப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை :...

2023-03-24 09:21:18
news-image

டி.எஸ்.எஸ். - மஹாநாம - 17ஆவது...

2023-03-23 16:54:41
news-image

இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர்:...

2023-03-23 16:21:36
news-image

மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை வாங்க கத்தார்...

2023-03-23 12:08:50
news-image

முவர்ஸ் கழக வெற்றியில் அசத்திய யாழ்....

2023-03-23 09:32:37
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

2023-03-22 14:55:24
news-image

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி :...

2023-03-22 11:40:58
news-image

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறும்...

2023-03-22 09:40:29
news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47