இந்திய - இலங்கை பல்துறைசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியம் - 74ஆவது குடியரசு தின நிகழ்வில் விஜயதாஸ

Published By: Nanthini

27 Jan, 2023 | 09:53 PM
image

(நா.தனுஜா)

லங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில், அனைத்து வழிகளிலும், இந்நாட்டு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகளை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். 

அதேவேளை இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் அரசியல், சமய, கலாசார, பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் வியாழக்கிழமை (26) மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான அரசியல், சமய, கலாசார மற்றும் பொருளாதார ரீதியிலான தொடர்பு பல வருடகாலமாக தொடர்ந்து நிலவி வருகிறது. குறிப்பாக, அசோக சக்கரவர்த்தி பாரத தேசத்தை ஆண்டபோது மஹிந்த தேரர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பௌத்த சமயத்தை கொண்டுவந்தமையானது இந்நாட்டு மக்கள் புதியதொரு பாதையில் பயணிப்பதற்கு வழிவகுத்த முக்கிய அம்சமாகும்.

அந்த வகையில் 74ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், சமய, கலாசார, பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

மேலும், கடந்த வருடம் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், அனைத்து வழிகளிலும் இந்நாட்டு மக்களுக்கு உதவக்கூடிய வகையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகளை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். அதேபோன்று கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கும் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இந்திய அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

கடந்த 2017ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். 

அதனை தற்போது நினைவுகூரும் அதேவேளை, இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ள பலனை மேலும் விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதுமாத்திரமன்றி, முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை என்பவற்றை மேலும் ஊக்குவிப்பதை முன்னிறுத்தி செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் ஆகியோர் உள்ளடங்கலாக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47