வடமத்திய மகாண சபையில் இன்று முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேலதிக 09 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிராக 19 வாக்குகளும் பெறப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை இரண்டு உறுப்பினர்கள் குறித்த சட்டமூலத்துக்கு வாக்களிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.