வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ்: ஐசிசி டெஸ்ட் அணித் தலைவரும் அவரே!

Published By: Nanthini

27 Jan, 2023 | 04:59 PM
image

(என்.வீ.ஏ.)

2022ஆம் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை இங்கிலாந்து அணித் தலைவரும் சகலதுறை வீரருமான பென் ஸ்டோக்ஸ் வென்றெடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கடந்த வருடம் வேறு யாரையும் விட சகல துறைகளிலும் பிரகாசித்ததற்காகவே பென் ஸ்டோக்ஸுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

கடந்த வருடம் 15 டெஸ்ட் போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டோக்ஸ் 2 சதங்கள், 4 அரைச் சதங்கள் உட்பட 870 ஓட்டங்களை குவித்தார்.

அதேபோன்று 20 இன்னிங்ஸ்களில் பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் 26 விக்கெட்களை வீழ்த்தியதுடன் 10 பிடிகளையும் எடுத்துள்ளார். இதன் மூலம் அவரது சகலதுறை ஆற்றல் வெளிப்பட்டது.

இங்கிலாந்தின் டெஸ்ட் அணித் தலைமைப் பதவியை பென் ஸ்டோக்ஸ் ஏற்ற பின்னர் 10 போட்டிகளில் 9இல் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

நியூஸிலாந்தையும் தென் ஆபிரிக்காவையும் டெஸ்ட் தொடர்களில் தனது சொந்த மண்ணில் வெற்றிகொண்ட இங்கிலாந்து, பிற்போடப்பட்ட இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று, அத்தொடரை 2 - 2 என சமப்படுத்தியது. 

அதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த இங்கிலாந்து, அங்கு 3 - 0 என முழுமையான வெற்றியை ஈட்டி தொடரை கைப்பற்றியது.

பென் ஸ்டோக்ஸ் அணித் தலைவராவதற்கு முன்னர் விளையாடப்பட்ட 4 டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததுடன், 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியையே ஈட்டியிருந்தது.

வருடத்தின் ஐசிசி டெஸ்ட் அணி

கடந்த வருடம் அணித் தலைவராக 9 டெஸ்ட்களில் இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்த பென் ஸ்டோக்ஸ் வருடத்தின் ஐசிசி டெஸ்ட் அணியின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் அணியில் 3 இங்கிலாந்து வீரர்களும், 4 அவுஸ்திரேலிய வீரர்களும், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த தலா ஒரு வீரரும் இடம்பெறுகின்றனர்.

டெஸ்ட் அணியில் உஸ்மான் கவாஜா (அவுஸ்திரேலியா), க்ரெய்க் ப்றத்வெய்ட் (மேற்கிந்தியத் தீவுகள்), மார்னுஸ் லபுஸ்சான் (அவுஸ்திரேலியா), பாபர் அஸாம் (பாகிஸ்தான்), ஜொனி பெயார்ஸ்டோவ் (இங்கிலாந்து), பென் ஸ்டொக்ஸ் (தலைவர் - இங்கிலாந்து), ரிஷாப் பன்ட் (இந்தியா), பெட் கமின்ஸ் (அவுஸ்திரேலியா), கெகிசோ ரபாடா (தென் ஆபிரிக்கா), நெதன் லயன் (அவுஸ்திரேலியா), ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து)            

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட்; பிரிதொரு...

2023-03-24 13:46:54
news-image

ஆஸி. ஆரம்பத் துடுப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை :...

2023-03-24 09:21:18
news-image

டி.எஸ்.எஸ். - மஹாநாம - 17ஆவது...

2023-03-23 16:54:41
news-image

இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர்:...

2023-03-23 16:21:36
news-image

மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை வாங்க கத்தார்...

2023-03-23 12:08:50
news-image

முவர்ஸ் கழக வெற்றியில் அசத்திய யாழ்....

2023-03-23 09:32:37
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

2023-03-22 14:55:24
news-image

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி :...

2023-03-22 11:40:58
news-image

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறும்...

2023-03-22 09:40:29
news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47