நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாமா?

Published By: Ponmalar

27 Jan, 2023 | 04:59 PM
image

குளிர்காலத்தில், நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கள், பழங்கள் மற்றும் பிற உணவுப்பொருட்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. எனினும், நீரிழிவு நோயாளிகளுக்கு எதை சாப்பிடுவது, எதை தவிர்ப்பது என்ற தயக்கம் எப்போதும் இருக்கும். ஏனெனில் உண்ணும் உணவில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டால் கூட, அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். இது அவர்களது ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது. 

குளிர்காலத்தில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு தாராளமாக கிடைக்கிறது. அனைவரும் இதை வாங்கி பல வழிகளில் சாப்பிடுவதுண்டு. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உட்கொள்ளலாமா? இது குறித்து, வைத்திய நிபுணரின் கருத்து.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்
- விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி, விட்டமின் டி, புரதம், நார்ச்சத்து, கார்போவைத்ரேட், ஆரோக்கியமான கொழுப்பு, கல்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பொஸ்பரஸ், கரோட்டினாய்டுகள் மற்றும் தியாமின் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ளன. இது அனைத்து வகையிலும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 

எனினும் இதன் சுவை இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட அச்சப்படுகிறார்கள். 

ஒரு உணவை சமைக்கும் முறை அதன் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருக்குமா அல்லது அதிகமாக இருக்குமா என்பதை தீர்மானிக்கும். உயர் ஜிஐ உள்ள அனைத்து பொருட்களும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஸ்டார்ச் மற்றும் கார்போவைத்ரேட் இருப்பதால், பலர் அதை சாப்பிட பயப்படுகிறார்கள்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை எப்படி சாப்பிட வேண்டும்?
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக நார்ச்சத்து மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் இதை தோலுடன் வேவைத்து சாப்பிட்டால், அது நீரிழிவு நோயில் நன்மை பயக்கும். மேலும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை எப்படி சாப்பிட கூடாது?
சிலர் சர்க்கரை வள்ளிக்கிழங்கை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவார்கள். இது சரியான முறையல்ல, அது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யும். ஆகையால் இந்த முறை நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது. 

ஆகையால் நீரிழிவு நோயாளிகள் வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவதே நல்லது. வாரம் ஒருமுறை அல்லது மாதத்தில் இரண்டு முறை சாப்பிடலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36