(எம்.சி.நஜிமுதீன்)

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதாக தேர்தல் காலத்தில் வாக்களித்தனர். எனினும் அதற்கான வேலைத்திட்டம் தற்போது அரசாங்கத்திடம் இல்லை என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

''சோபித தேரர் ஒரு பிரதான விடயத்தை அடிப்படையாகக்கொண்டே தமது நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதாவது நிறைவேற்று அதிகாரமுடைய  ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதாகும். அது நாட்டின் சாபக்கேடு என அவர் அடையாளப்படுத்தியிருந்ததாக'' ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மாதுலுவாபே சோபித தேரரின் இறுதிக்கரியையில் கலந்துகொண்ட போது தெரிவித்திருந்தார். எனவே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதாக ஜனாதிபதி உறுதியாகக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் நிறைவேற்று அதிகாரமுடைய  ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு  ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. ஆகவே  அவ்விடயத்தில் தேசிய அரசாங்கத்திற்குள் நேரெதிரான முரண்பாடு உள்ளது என்றார்.