முக சுருக்கங்களை நீக்கும் ஃபேஸ் பெக்!

Published By: Ponmalar

27 Jan, 2023 | 04:04 PM
image

வயதாக ஆரம்பித்தவுடன், முகத்தில் முதுமையின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும், அதாவது சுருக்கங்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் தோல் பராமரிப்பு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எனவே சுருக்கங்களை அகற்றுவதற்கான வீட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளலாம்.

வாழைப்பழ ஃபேஸ் பெக்
இதற்கு வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் தோலுரித்து நன்றாக மசிக்கவும். பின்னர் இந்த வாழைப்பழ பேஸ்ட்டை சீராக முகத்தில் தடவவும். அதன் பிறகு, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க விட்டு உலர்த்த பிறகு சுத்தமான நீரினால் கழுவவும். இந்த வாழைப்பழ மாஸ்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினாலே, நீங்கள் நல்ல பலனைக் காணத் தொடங்குவீர்கள். வாழைப்பழத்தில் நல்ல அளவு விட்டமின் ஏ, பி6 மற்றும் சி நிறைந்துள்ளதால், முகச் சுருக்கங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

தயிர் ஃபேஸ் பெக்
தயிர் மாஸ்கிற்கு இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன், ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து கழுவவும். தயிரில் உள்ள லக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. அதே நேரத்தில், எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன, அவை உங்கள் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் இயற்கையான மொய்ஸ்சரைசராக செயல்படுகிறது. தினமும் இரவில் தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சரும வறட்சியிலிருந்து விடுபடலாம். ஆனால் எண்ணெய் சருமத்தில் இந்த செய்முறையை முயற்சிக்காதீர்கள்.

அரிசி ஃபேஸ் பெக்
இதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசி மா, ரோஸ் வோட்டர் மற்றும் பால் கலக்கவும். பின்னர் இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முழு முகத்திலும் தடவி, சுமார் 20 நிமிடங்கள் கழித்து, சுத்தமான நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை தடவுவது நல்லது. அரிசி மாவில் முதுமையைத் தடுக்கும் பண்புகள் இருப்பதால், கொரிய தோல் பராமரிப்புப் பொருட்களில் அரிசி மா அல்லது தண்ணீர் கண்டிப்பாக சேர்க்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெக்சிங் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

2023-03-24 13:48:39
news-image

சருமத்தை மென்மையாக்கும் இயற்கை மொய்ஸ்சுரைசர்

2023-03-17 14:59:33
news-image

எந்த காலமானாலும் சரி எந்த யுகமானாலும்...

2023-03-01 14:36:43
news-image

அழகை அதிகரிக்கும் எலுமிச்சைத் தோல்

2023-02-10 13:04:52
news-image

உங்கள் சருமத்துக்கேற்ற பவுண்டேஷனை தெரிவு செய்யும்...

2023-02-03 17:21:13
news-image

'வாசனை திரவியங்கள்'- சில சுவாரசியமான தகவல்கள்

2023-02-02 17:21:04
news-image

இளம் பெண்கள் ஏன் தாவணி அணிய...

2023-02-01 16:08:50
news-image

பெண்களுக்கு வாதத்தால் வரும் மார்பக வலி

2023-01-28 12:07:36
news-image

முக சுருக்கங்களை நீக்கும் ஃபேஸ் பெக்!

2023-01-27 16:04:55
news-image

அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு ஆலோசனைகள்

2023-01-26 17:25:55
news-image

சருமத்துக்கேற்ற ஃபவுண்டேஷனை தேர்வு செய்வது எப்படி?

2023-01-26 12:40:30
news-image

மாதாந்திர வலி

2023-01-25 17:23:18