200 வருட மலையக மக்களின் 'கூட்டு நன்றி வழிபாடு'

Published By: Nanthini

27 Jan, 2023 | 04:32 PM
image

இலங்கை மண்ணில் மலையக மக்கள் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கை மெதடிஸ்த திருச்சபை, இலங்கை திருச்சபை மற்றும் தேசிய கிறிஸ்தவ மன்றம் என்பவற்றின் இணை ஏற்பாட்டில் 'மாண்புமிகு மலையக மக்கள்' என்ற தொனிப்பொருளில் மலையக மக்களின் 200 வருட வரலாற்றுக்கு கடவுளுக்கு நன்றி செலுத்தும் 'கூட்டு நன்றி வழிபாடு' எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் மெதடிஸ்த ஆலயத்தில் நடைபெறுகிறது.

இலங்கை திருச்சபையின் பேராயர் இலட்சுமன் துசாந்த ரொட்ரிகோ, இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் வண.எபநேசர் ஜோசப் ஆகியோரின் தலைமையில், தேசிய கிறிஸ்தவ மன்ற பொதுச்செயலாளர், அதன் திருச்சபைகளின் பேராயர்கள், குருமார்கள், சர்வமத தலைவர்கள், பொதுமக்கள், மலையக சமூக பிரதநிதிகள் ஆகியோரின் பங்களிப்பில் இக்கூட்டு நன்றி வழிபாடு நடைபெறுகிறது.

இலங்கை திருச்சபை வண.சத்திவேல், வண.மைக்கல் சுவாமிநாதன், ரெல்ஸ்டன் மற்றும் இலங்கை மெதடிஸ்த திருச்சபை வண.செங்கன் தேவதாசன் ஆகியோரின் இணை ஒருங்கிணைப்பில் இவ்வழிபாடு நடைபெறுகிறது.

இவ்வழிபாட்டின் நிறைவில் திருச்சபை சமூகமாக மலையக மக்களுடன் ஒன்றிணைந்து பொது கலாசார நிகழ்வும் ஊர்வலமும் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பித்து, டி.கே.டபிள்யூ. மண்டபத்தில் நிறைவுபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்