வரலாற்றில் முதல் முறையாக 3 பில்லியன் ரூபா இலாபத்தினை ஈட்டி அபிவிருத்தி லொத்தர் சபை சாதனை 

Published By: Nanthini

27 Jan, 2023 | 03:36 PM
image

னாதிபதி நிதியத்தின் பொது சேவைக்காகவும், மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்துக்காகவும் நிதி திரட்டும் முகமாக 1997, 20ஆம் இலக்க சட்டம் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட அபிவிருத்தி லொத்தர் சபை 2022ஆம் ஆண்டு தனது வருடாந்த வருமான இலக்குகளை அடைந்து, வரலாற்றில் முதல் முறையாக 3 பில்லியன் ரூபா இலாபத்தினை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

கொவிட் நோய் நிலைமை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார சவால்கள் மற்றும் அரசியல் பிரச்சிணைகள் காரணமாக 2022ஆம் ஆண்டு அரச மற்றும் தனியார் துறைசார் அனைத்து வணிக நிறுவனங்களினதும் செயற்பாடுகள் பல நாட்களாக செயலிழந்து காணப்பட்டதும், அதன் காரணமாக தமது வியாபார இலக்குகள் மற்றும் வருடாந்த வருமான இலக்குகளை அடைய முடியாத அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவும் காணப்பட்டன. 

அபிவிருத்தி லொத்தர் சபையின் வியாபார நடவடிக்கைகளுக்கும் மேற்கூறப்பட்ட சவால்கள் நேரடியாக தாக்கம் செலுத்திய போதும், அதனை சிறப்பாக கட்டுப்படுத்தவும் முகாமை செய்யவும் தற்போதைய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபைக்கும், சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களுக்கும் முடிந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் 40 வருட வரலாற்றில் நிறுவனங்களின் அனைத்து சவால்கள் மற்றும் இன்னல்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடிய விற்பனை வலைப்பின்னலொன்று நிறுவனத்துக்கு இருத்தல், நிறுவனத்தின் முகாமைத்துவம் மூலம் எடுக்கப்படும் நித்தம் புதுப்பிக்கப்படும் சந்தைப்படுத்தல் திட்டங்கள் மற்றும் உபாயங்களுக்கு இணைய செயற்பாடும் மாவட்ட விற்பனை விநியோக முகவர்கள் மற்றும் விற்பனை முகவர் வலைப்பின்னலும் அவர்களின் கீழ் கடமையாற்றும் 20,000க்கு அதிகமான விற்பனை உதவியாளர் குழு மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாடும் நிறுவனத்துக்கு பாரிய சக்தியாக அமைகின்றது. 

மேலும், தற்போதுள்ள பொருளாதார சவால்கள் மத்தியில் தமது லொத்தர் வியாபாரத்தினை பாதுகாத்துக்கொள்வதற்கு அவர்கள் ஆற்றும் சேவை மிக முக்கியமானது என அபிவிருத்தி லொத்தர் சபை கூறுகிறது.

பணப்பரிசுகளாக 10 பில்லியன் ரூபாவுக்கு அண்மித்த தொகையினை சுப்பர் பரிசுகள், முதல் பரிசுகள், இரண்டாம் பரிசுகள், மூன்றாம் பரிசுகள் மற்றும் ஏனைய பரிசுகளாக 2022ஆம் ஆண்டு தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. 

அத்துடன் விற்பனை முகவர்களுக்குரிய கமிஷன் பணமாக 3 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான பணம் வழங்கப்பட்டுள்ளது. 

அதேவேளை அரசு மூலம் விதிக்கப்பட்ட அனைத்து வரி செலவுகளாக 837 மில்லியன் ரூபா பணம் அரசுக்கு வழங்கி, ஏனைய செலவுகளையும் மேற்கொண்ட பின்னர் அபிவிருத்தி லொத்தர் சபை 3 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான இலாபத்துடன் 19 பில்லியன் ரூபாவுக்கு அதிகமாக விற்று, முதலினை பெற்றுக்கொள்ள முடிந்தது என்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவித்தது. 

விசேடமாக, அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவர் மற்றும் முகாமைத்துவத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித் தொடர் இவ்வெற்றியினை பெற்றுக்கொள்வதற்கு உறுதுணையாக அமைந்தது என நிறுவனம் சுட்டிக்காட்டியது. 

அதன்போது அனைத்து பிரதேசங்களிலும் விநியோக விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை முகவர்களுக்கு அவர்களின் வருடாந்த விற்பனை முகவர் சந்திப்புக்களை 'சங்வர்தன அபிமன்' எனும் பெயரில் புதிய வடிவமைப்பில் மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

முன்னைய சம்பிரதாயங்களை விட வேறுபட்ட விசேட விற்பனை முகவர் சந்திப்புக்களுக்கு நேரடியாக தொடர்புபடும் பிரதேச அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உள்ளடங்கலாக அதிகார அமைப்பின் பிரமுகர்களையும் அழைத்து விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் நீண்ட கால பிரச்சினைகளை தீர்க்க வாய்ப்பு கிடைத்தது. 

அவ்வாறே ஆண்டில் அதிக விற்பனையினை மேற்கொண்ட மாவட்டத்தின் சிறந்த விற்பனை முகவர்களை பாராட்டும் மற்றும் அவர்களுக்கு பரிசுப் பணம், சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் புதிய முறையில் அவர்களை ஊக்கமளித்தல் 2022ஆம் ஆண்டு வெற்றியடைய காரணமாக அமைந்தது. 

மேலும், சபையின் சிரேஷ்ட முகாமைத்துவம் தனது கடமைகளின் மத்தியில் மாவட்ட ரீதியிலான விற்பனை தொடர்பாக வெவ்வேறாக தேடிப் பார்த்து செயற்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் விற்பனை வலைப்பின்னலின் சிறிய குழு சந்திப்புக்களை நடாத்தி, பல பிரதேசங்களில் உள்ள லொத்தர் குடில்களுக்கு தனிப்பட்ட ரீதியாக சென்று, விற்பனை உதவியாளர்களுக்கு உள்ள குறைகளை தேடிப் பார்த்து, அவர்களை ஊக்குவித்து, அபிவிருத்தி லொத்தர் சபை குறித்த நம்பிக்கையினை ஏற்படுத்தி, அதனூடாக மென்மேலும் லொத்தர் விற்பனையினை அதிகரிக்கச் செய்தல் இந்த  வெற்றிக்கு இன்னுமொரு காரணமாக அமைந்தது. 

நாளாந்த லொத்தர் விற்பனையினை அதிகரிக்கச் செய்வதற்கு நடைமுறையில் உள்ள லொத்தர்களின் பரிசமைப்புக்களை கண்கவர் வண்ணம் மாற்றியமைத்து, அந்த லொத்தர்களில் மாதாந்தம் விசேட சீட்டிழுப்புக்களை மேற்கொண்டமை வருமானத்தினை அதிகரிக்கச் செய்வதற்கான மேலு‍மொரு காரணமாக அமைந்துள்ளது. 

விசேடமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இலக்காக கொண்டு புதிய நிகழ்ச்சிகள் பலவற்றினை செயற்படுத்துவதற்கும், அப்பிரதேசங்களில் வாழுகின்ற தமிழ்மொழி பேசும் மக்களை இலக்காக கொண்டு, தெற்கு மக்கள் இடையேயும் புதிய லொத்தரை விரிவாக்கம் செய்து, அதிகதிகமாக பரிசுகள் கிடைக்கும் வண்ணம் பரிசமைப்புக்களை தயாரித்து, 'வலம்புரி' எனும் பெயரில் புதிய லொத்தர் ஒன்றினை அறிமுகப்படுத்தியமையும் விசேடமானது.

கடந்த வருடத்தில் நாளாந்த லொத்தர் சீட்டிழுப்புக்களின் போதான அதிக விற்பனையினை மேற்கொள்ளவும் அபிவிருத்தி லொத்தர் சபையால் முடிந்துள்ளது. 

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி வெற்றிகரமான 40ஆவது ஆண்டு நிறைவினை கொண்டாடிய அபிவிருத்தி லொத்தர் சபை தமது நிறுவன சின்னத்துடன் புதிய கண்கவர் வியாபார சின்னத்தினையும் அறிமுகப்படுத்தி, நாளுக்கு நாள் முன்னேறும் புதிய லொத்தர் சந்தையினையும், புதிய தொழில்நுட்பத்துடனான இளைஞர் அணியினையும், இதுவரை எம்முடன் கைகோர்த்துள்ள வாடிக்கையாளர்களையும் இணைத்தல் இப்புதிய வியாபார சின்னத்தினை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கமாக அமைந்ததாக அறிவிக்கப்படுகிறது. 

மேலும், இந்த லொத்தர் வியாபாரத்தில் புதிய சீட்டிழுப்பு முறைகளை அறிமுகப்படுத்தல், பழைய லொத்தர்களுக்கு பதிலாக புதிய லொத்தர்களை அறிமுகப்படுத்தலினூடாக 2023ஆம் ஆண்டுக்குரிய நிதி இலக்குகளை அடைந்து, அதிக வருமானத்தினை பெற்றுக்கொள்வதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை எதிர்பார்க்கிறது.

நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக மிகப் பெரிய மக்கள் சேவையினை மேற்கொள்ளும் ஜனாதிபதி நிதியத்துக்கும், நாட்டின் கல்வியில் சிறந்த சந்ததியினரை உருவாக்கும் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்துக்கும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிக பங்களிப்பினை வழங்க இலாபத்தினை ஈட்டி நிதியங்கள் இரண்டினை திறப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், முன்னைய ஆண்டுகளை விட அதிக அதிகமாக வெற்றியாளர்களை உருவாக்கவும், நாட்டின் பொருளாதாரத்துக்கு சக்தியாக அமைந்த தொழில்முனைவோரையும், உயர் பொருளாதார தரத்திலான மக்களையும் உருவாக்குவதற்கு மக்களின் வாழ்க்கைக்கு ஒளியூட்டும் அபிவிருத்தி லொத்தர் சபை எதிர்பார்க்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'சூர்யா'வுக்கான வர்த்தக நாமத் தூதுவராக இலங்கை...

2023-03-23 15:05:01
news-image

கடல் சுத்திகரிப்புத் திட்டத்தினூடாக தூய்மையான இலங்கையை...

2023-03-23 10:52:04
news-image

மக்கள் வங்கிக்கு சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள்...

2023-03-20 16:26:13
news-image

Daraz Express இனூடாக பெண் ஓட்டுநர்களின்...

2023-03-18 16:53:49
news-image

தனது நிலையான பயணத்தை தொடரும் அமானா...

2023-03-17 11:16:17
news-image

யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் வகையில்...

2023-03-15 17:19:59
news-image

மக்கள் வங்கியின் வனிதா வாசனா மூலமாக...

2023-03-07 11:16:52
news-image

கல்வி அமைச்சு மற்றும் Microsoft இணைந்து...

2023-03-07 11:46:52
news-image

வளர்ந்துவரும் இளம்தொழில் வல்லுநர்கள் நவீன மற்றும்...

2023-03-07 11:47:17
news-image

2022 ஆண்டிற்கான சிறந்த பெறுபேறுகளை பான்...

2023-02-28 11:36:32
news-image

சன்குயிக் ரெடி டு டிறிங்க் தொழிற்சாலையினை...

2023-02-27 14:34:37
news-image

"தைரியமான விளம்பர பிரசாரத்தின் மூலம் மாதவிடாய்...

2023-02-27 11:28:32