ஈரானிலுள்ள அஸர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச் ‍சூட்டில் ஒருவர் பலி! ஈரான் பொறுப்பு என்கிறது அஸர்பைஜான்

Published By: Sethu

27 Jan, 2023 | 03:30 PM
image

ஈரானிலுள்ள அஸர்பைஜான் தூதரகத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 

அஸர்பைஜான் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் உயிரிழந்தார் எனவும் மேலும் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர் எனவும் தெஹ்ரான் நகர பொலிஸ் தலைவர் தெரிவித்துள்ளார். 

இத்தாக்குதல் தனிப்பட்ட காரணங்களால் நடந்துள்ளது என ஈரானிய வெளிவிகார அமைச்;சு தெரிவித்துள்ளது.

இம்சம்பவத்தையடுத்து தூதரகத்தில் உள்ளவர்களை அஸர்பைஜான் வெளியேற்றியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஓர் ஈரானியர். அஸர்பைஜான் பெண்ணொருவரை அவர்  திருமணம் செய்துள்ளார் என தெஹ்ரான் பொலிஸ் தலைவர் ஜெனரல் ஹொசைன் ரஹிமி கூறியுள்ளார். 

தனது மனைவி 9 மாதங்களாக மேற்படி தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நபர் கூறினார் எனவும் ரஹிமி தெரிவித்துள்ளார். 

சந்தேக நபர் சிறார்களான தனது இரு பிள்ளைகளுடன் தூதரகத்துக்குள் நுழைந்து, துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார் என ஜெனரல் ஹொசைன் ரஹிமி கூறியுள்ளார்.

இம்சம்பவத்தையடுத்து தூதரகத்தில் உள்ளவர்களை அஸர்பைஜான் வெளியேற்ற ஆரம்பித்துள்ளது. இத்தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பு எனவும் அஸர்பைஜான் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமரோடு பானிபூரி உண்ட ஜப்பான்...

2023-03-22 17:25:44
news-image

மோடிக்கு எதிராக சுவரொட்டி : 6...

2023-03-22 15:45:06
news-image

சிரியாவின் அலேப்போ விமான நிலையம் மீது...

2023-03-22 14:08:01
news-image

பிரேஸில் அரச தொழில்களுக்கு 30% கறுப்பின...

2023-03-22 12:24:44
news-image

உக்ரேனுக்கு 15.6 பில்லியன் வழங்குகிறது ஐஎம்எவ்:...

2023-03-22 11:01:11
news-image

நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க...

2023-03-22 10:46:57
news-image

வாகனங்கள், உடைகளை மாற்றி அம்ரித்பால் சிங்...

2023-03-22 10:36:46
news-image

ஓரின சேர்க்கையாளர்களை சிறையிலடைக்கும் சட்டமூலத்துக்கு உகண்டா...

2023-03-22 09:43:06
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : பாகிஸ்தானிலும் இந்தியாவிலும்...

2023-03-22 08:56:00
news-image

மெக்ஸிக்கோவில் வானவேடிக்கை தயாரிக்கப்பட்ட வீட்டில் வெடிப்புச்...

2023-03-21 18:01:43
news-image

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு சீன...

2023-03-21 16:59:27
news-image

ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா உக்ரேனுக்கு...

2023-03-21 16:57:48