தொல்பொருள்களை பாதுகாக்கும் முகமாக புதிய சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் வரலாற்றை அடையாளம் காட்டக்கூடிய தொல்பொருள்களை பாதுகாப்பது அவசியமாகும்.

அதனடிப்படையில் தொல்பொருள்களை பாதுகாப்பதற்கான சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த நடவடிக்கைகளை ஜனவரியிலிருந்து ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.