பக்கவாதத்தை முன்கூட்டியே உணர்த்தும் முக்கியமான அறிகுறிகள்!

Published By: Ponmalar

27 Jan, 2023 | 02:00 PM
image

பக்கவாதம் என்பது எப்போது ஏற்படும் என்பதை நம்மால் அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது.  பக்கவாதம் என்பது கொடுமையான விஷயமாக கருதப்படுகிறது, இந்த பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் நம்மால் தனித்து செயல்பட முடியாது.  மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடைகள் ஏற்படுவதால், மூளையின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு நமது உடலிலுள்ள செல்கள் பாதிப்படைந்து பக்கவாதம் ஏற்படுகிறது.  

மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதால் நமது உடல் செல்களுக்கு ஒட்சிசன் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.  முகம் ஒருபக்கமாக வளைதல் அல்லது வாய் பேச முடியாத நிலை ஏற்படுதல் போன்றவை பக்கவாதத்தின் பொதுவான வெளிப்பாடாக இருந்து வருகிறது.  பெரும்பாலும் கை அல்லது கால் பகுதியில் தான் பக்கவாதம் ஏற்படுகிறது.

பக்கவாதம் திடீரென்று ஏற்படுகிறது தான் என்றாலும் பக்கவாதம் ஏற்படுவதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னர் சில அறிகுறிகளை நமது உடல் வெளிப்படுத்துகின்றது.  தீவிர பக்கவாதம் ஏற்படுவதற்கு பல நாட்களுக்கு முன்பு சில அறிகுறிகள் வெளிப்படுகிறது.  பக்கவாத நோயாளிகளில் 43 சதவீதம் பேர் பக்கவாதம் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை மினி-ஸ்ட்ரோக் அறிகுறிகளை அனுபவித்ததாக ஆராய்ச்சியின் அறிக்கைகள் தெரிவிக்கிறது.  இந்த வகையைச் சேர்ந்த பொதுவான அறிகுறிகளில் ஒன்று உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிலருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கு பல நாட்களுக்கு முன்பு தலைவலி , உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகளை அனுபவிப்பார்கள்.  உங்களின் ஒரு கை அல்லது காலில் உணர்வின்மை அல்லது வலி போன்றவை ஏற்படும். மூளையின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படுவதால் தான் இதுபோன்ற நிலை உங்களுக்கு ஏற்படுகிறது.  சிலருக்கு உடலின் பெரும்பகுதி பலவீனமாக இருக்கும்.  உங்கள் கைகளில் ஒன்றில் பலவீனம் என்பது ஒரு தொடர்ச்சியான பக்கவாதத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.  இந்த அறிகுறிகளை முன்னரே நீங்கள் கவனிப்பதன் மூலம் பெரியளவில் ஆபத்துக்கள் எதுவும் நடக்காமல் அதிலிருந்து தப்பித்து விடலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஃபோர்மில்க் டயரியா' எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-03-26 15:27:52
news-image

இன்சுலின் செலுத்திக்கொள்வதால் பக்க விளைவு உண்டாகுமா?

2025-03-25 15:50:06
news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15