சமூக செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான ஏ.சீ.ஆர்.ஜோன் 'மலையக வரலாற்றை அறிவோம்; மாற்றத்துக்கு வித்திடுவோம்' என்ற தொனிப்பொருளில் வடிவமைத்துள்ள 2023ஆம் ஆண்டுக்கான மலையக நாட்காட்டியின் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை 28ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு ஹட்டன் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள ஹட்டன் சமூக நல நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.
ஈழத்து மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் தலைமையிலான இந்நிகழ்வில் வெளியீட்டுரையை கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் ஜெ.சற்குருநாதன் ஆற்றவுள்ளனர்.
'200 வருட மலையக மக்கள் வரலாறு - இருளும் ஒளியும்' என்ற தலைப்பில் ஆய்வாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருட்பணி மா.சக்திவேல் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
அதனையடுத்து நாட்காட்டி வடிவமைப்பாளர் ஏ.சீ.ஆர்.ஜோன் ஏற்புரை வழங்கவுள்ளார்.
இந்த நாட்காட்டியில் மலையக அரசியல், இலக்கிய, சமூக செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பு வழங்கி, மலையக சரித்திரத்தில் நீங்கா இடம்பெற்றிருக்கும் பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள் மற்றும் மலையகத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை குறித்த திகதிகளில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM