சிலாபத்துறை கடற்பகுதியில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் 9  பேரை கடற்படையினர் நேற்று (22) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் பயன்படுத்திய 2 மீன்பிடி படகுகள் மற்றும் 2  தடைசெய்யப்பட்ட வலைகள்  என்பவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள்  மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.