ஜப்பான் தனது உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக முதல் முறையாக மிகவும் அதிகளவு தொகையை பாதுகாப்பிற்காக ஒதுக்கி பாராளுமன்ற அனுமதியையும் பெற்றுள்ளது.

ஜப்பான் வரவு செலவு வரலாற்றில் முதன் முறையாக 97.5 ட்ரில்லியன் யென்கள் அடுத்த வருடத்திற்கான பாதுகாப்பு கட்டுமானத்திற்காக அந்நாட்டு பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டு, நிதியின் முதல் நிலையாக 1.4 வீதமான 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய தொகைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பாராளுமன்ற அனுமதியை அந்நாட்டு பிரதமர் சென்சோ அபே பெற்றுள்ளார்.

தற்போது பசுபிக் பிராந்திய வலையத்தில் கடல் ஆக்கிரமிப்பு பணிகளை சீனா முன்னெடுத்திருக்கின்றமையும், வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை திட்டம் வெற்றியளித்துள்ளமை என்பனவற்றால் ஜப்பான் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக கூறியே இப்பாரிய நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் கடல் சார் பாதுகாப்பிற்காக போர் விமானங்கள் மற்றும் இரண்டு நீர் மூழ்கி கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு 210 பில்லியன்களை ஒதுக்கியுள்ளதோடு 200 கடல்சார் கண்கானிப்பு அதிகாரிகளை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது.

அண்மைக்காலமாக கிழக்கு சீனாப்பகுதியில் கடல் ஆக்கிரமிப்பு பிரச்சினைகள் வலுப்பெற்றிருப்பதாலும், வடகொரியா கடலுக்கடியில் இரண்டு அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளமை மற்றும் 20 இற்கும் மேற்பட்ட ஏவுகனை பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளமை என்பவற்றால் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய சூழல் அதிகமாகவே காணப்டுகின்றது.

தற்போது ஜப்பான் பாராளுமன்றம் அங்கிகரித்துள்ள அதிகளவான பாதுகாப்பு நிதி ஒதுக்கீடானது ஜப்பான் வரலாற்றில் பதிவான ஜந்தாவது மிக அதிகளவான நிதி ஓதுக்கீடு என்பது குறிப்பிடத்தக்கது.